வெள்ளி, 30 மார்ச், 2018

பங்குனி உத்திரம்



மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :

👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

👉 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

👉 தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

👉 சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

👉 ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

👉 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

👉 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

👉 பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

👉 அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.

👉 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

👉 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

👉 சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩
கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள் "மைத்ர முகூர்த்தம்"
     எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் ,
   எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்...!!

மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம்,

 மைத்ர முகூர்த்த நாட்களில்,

   நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் ,

கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு
திருப்பி தரவேண்டும்....!!

 அவ்வளவு தான்.

 எவ்வளவு பெரும் தொகையானாலும் ,
       
   சிறுக சிறுக அடைபட்டுவிடும்....!!

கடன் விரைவில் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் 2018

4.4.18 புதன் இரவு 8.40 முதல் 10.40

15.4.2018 ஞாயிறு காலை 6.06 முதல் 8.06 வரை;

1.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.58 முதல் இரவு 8.58 வரை

14.5.2018 திங்கட்கிழமை அதிகாலை 3.54 முதல் 5.54 வரை

29.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.50 முதல் இரவு 8.50 வரை

10.6.2018 ஞாயிறு அதிகாலை 4.10 முதல் 6.10 வரை

25.6.2018 திங்கட்கிழமை மாலை 3.51 முதல் 5.51 வரை

7.7.2018 சனி நள்ளிரவு 1.57 முதல் 3.57 வரை

22.7.2018 ஞாயிறு மாலை 3.13 முதல் 4 வரை

23.7.2018 திங்கட்கிழமை மதியம் 2 முதல் மாலை 4 வரை

3.8.2018 வெள்ளி இரவு 10.56 முதல் 12.56 வரை

19.8.2018 ஞாயிறு மதியம் 12.08 முதல் 2.08 வரை

30.8.2018 வியாழன் இரவு 8.56 முதல் 10.56 வரை

15.9.2018 சனி காலை 10.08 முதல் 12.08 வரை

22.9.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;

மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;

இரவு 8.20 முதல் 10.20 வரை;

நள்ளிரவு 2.20 முதல் 4.20 வரை;

27.9.2018 வியாழன் இரவு 8.40 முதல் 10.40 வரை;

6.10.2018 சனி காலை 6.55 முதல் 8.55 வரை;

மதியம் 12.55 முதல் 2.55 வரை;

மாலை 6.55 முதல் 8.55 வரை;

இரவு 12.55 முதல் நள்ளிரவு 2.55 வரை;

13.10.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;

24.10.2018 புதன் மாலை 6.28 முதல் 8.28 வரை;

9.11.2018 வெள்ளி காலை 6.36 முதல் 8.36 வரை;

20.11.2018 செவ்வாய் மாலை 5.10 முதல் 6.19 வரை;

21.11.2018 சனி மாலை 4.23 முதல் 6.23 வரை;

6.12.2018 வியாழன் காலை 6.40 முதல் 8.40 வரை;

18.12.2018 செவ்வாய் மதியம் 2.30 முதல் மால 4.30 வரை;

இந்த மைத்ரமுகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறு தொகையை கட்ட தொடங்கினாலே..போதும்...!!

விரைவில் கடனை தீர்க்கும் வளம் பெற்று விடுவீர்கள்...!

பணம் கொடுத்து உதவ முடியலைன்னாலும்,

நல்ல விசயத்தை சொல்லிக்கொடுப்போம்...!!

வியாழன், 29 மார்ச், 2018

bharathegopu.blogsbot.com
அரைஞாண் கயிறு அணிவது எதற்காக தெரியுமா?

அரைஞாண் பெயர் விளக்கம் :

ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் வந்தது.

அரைஞாண் கயிறு உண்மையில் எதற்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினார்கள் என்று தெரியுமா?

அரைஞாண் கயிறு என்பது நம்முடைய சிறிய வயதில் நம் இடுப்பில் கட்டிவிடப்படும் ஒருவகை கருப்பு கயிறு ஆகும். அரைஞாண் கயிற்றின் பலன்களை பற்றி பல விதங்களில் கூறலாம். நம்மை விஷம் கொண்ட பூச்சிகள் மற்றும் பாம்பு போன்றவை தீண்டி விட்டால் அந்த விஷம் நமது கடிவாய் மற்றும் இதயத்திற்கு செல்லாமல் தடுப்பதற்கு, அரைஞாண் கயிறு பயன்படுகிறது.

எப்படியெனில் நமது கையினால், அரைஞாண் கயிற்றை அறுத்தெடுத்து அவசர உதவியாக இறுக்கிக் கட்டும் ஒரு தற்காப்புக்காக பயன்படுகிறது. கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பானது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஏனெனில் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு குழந்தை தன்னை தயார் செய்து கொள்ளும் போது இதயத்துடிப்பு அதிகமாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் அதன் இதயத் துடிப்பை சீராக்க உதவுவது குழந்தையின் இடுப்பில் கட்டப்படும் அரைஞாண் கயிறு தான்.

இடுப்புக்கு அருகில் மட்டுமே ரத்தக் குழாய்கள் மெலிதாக இருக்கும். அதேபோல் தோலின் மிக அருகில் செல்கின்றன. எனவே ஈரம் பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாகத் திரித்து, அதையே குழந்தைகளின் இடுப்பில் கட்டிவிடுவார்கள். ஆனால், நம் முன்னோர்கள் அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, காத்துக்கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்ற நம்பிக்கையை விதைத்தார்கள்!

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண் கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது.

இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பாகவே பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

சில விஷயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அரைஞாண் கயிறை கட்டத்தான் செய்கிறார்கள். இனிமேல் நாமும் நம் பிள்ளைகளுக்கு இதுபோன்ற நம் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காது சிறுசிறு விஷயங்களையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம்.

1
bharathegopu.blogspot.com

எண் 1ல் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
பிறந்த எண்களிலுள்ள சில ரகசியம்
1 (1, 10, 19, 28)ல் பிறந்தவர்களின் ரகசியம்

❶ 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும், தர்ம குணமும் அதிகம் இருக்கும்.

❶ தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும், நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர். முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும். கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்து செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு.

❶ தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள். இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள். அதிக பேச்சுத்திறமை உண்டு.

அதிர்ஷ்ட கல் :

❶ சூரியனின் ஆதிக்கமான எண் 1ல் பிறந்தவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த அதிர்ஷ்ட கல்லை அணிவதன் மூலம் மனோதைரியம், சாந்தமான குணம், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி போன்ற நற்பலன்கள் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்நோய் போன்றவை விலகும்.

❶ ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் தருபவை :

❶ அதிர்ஷ்ட தேதி - 1, 10, 19, 28

❶ அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு, மஞ்சள்

❶ அதிர்ஷ்ட திசை - கிழக்கு

❶ அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு

❶ அதிர்ஷ்ட கல் - மாணிக்கம்

❶ அதிர்ஷ்ட தெய்வம் - சிவன்


❶ 1ஆம் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த எண்களிலுள்ள ரகசியங்களை அறிந்து கொண்டு பரிகாரம் மற்றும் பூஜைகள் செய்தால் அனைத்தும் வெற்றிகளாகவே அமையும்.

பிரதோஷம்

பிரதோஷம் என்றால் என்ன ?
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.
பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.
இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?
பிரதோஷம் மகிமை
அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்;
ஞாயிறு பிரதோஷம்:
சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
திங்கள் பிரதோஷம்:
பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.
பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.
புதன் பிரதோஷம்:
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
வியாழன் பிரதோஷம்:
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.
வெள்ளி பிரதோஷம்:
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
சனி மஹா பிரதோஷம்:
சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.
கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :
வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.
தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

கோமேதகம் கல்


கோமேதகம் காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். புகை படிந்த சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய 
தன்மையும்கொண்டதாகும்தன்மைமை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர். கல்லின் உள்ளே பார்க்கும் போது தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு அம்சமாகும்.

தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும்.

சாயாகிரகமான ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. ராகு எந்த வீட்டில் உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதியின் காரகத்துவத்திற்கேற்றவாறு செயல்படுவார். ராகு நின்ற வீட்டின் அதிபதி சுபர் வீட்டில் இருந்து அவரும் சுபராக இருந்தால் கோமேதகக் கல்லை அணியலாம். அதுபோல் ராகுவின் திசை நடப்பில் உள்ளவர்களும் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்களும் 4,13,22,31 ஆகிய எண்ணுக்குரியவர்களும் கோமேதகக் கல்லை அணியலாம். கோமேதகக் கல்லை வெள்ளி அல்லது தங்கத்தில் பதித்து மோதிர விரலில் உடலில் படும் படி அணிவது உத்தமம்.

கோமேதகக் கல்லானது இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் கற்கள் இங்கேயே பட்டை தீட்டி விற்பனை செய்யப்படுகிறது.

கோமேதகத்தின் பயன்கள் 

கோமேதகக் கல்லை அணிவதால் தோலில் உண்டாகக்கூடிய நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள், வண்டி, வாகனங்களில் செல்வதால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும். மற்றும் தேவையற்ற பழக்க வழக்கங்கள் விலகும். பேச்சில் நிதானமும் உண்டாகும்.

தேன் நிறத்தில் காணப்படும் ஜிர்க்கான் கற்கள் கோமேதகம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன. மெல்லிய கருப்பு நிற, ஒளியற்ற தன்மை, கடினமான தட்டையான மஞ்சள் நிற கண்ணாடிக்கல் போல் தோற்றம் தருவது சராசரியான தன்மை கொண்டவைகளே. இவை சுபமானதாய கருதப்படுவதில்லை.

கோமேதகம் விலை குறைவுடையது என்பதாலும், எளிதில் கிடைக்கப்பெறுவது என்பதாலும் இதற்கு மாற்றுக் கல் தேவையில்லை. என்றாலும் ஒன்றாம் எண்ணுக்குரிய கார்னெட் கற்களை கோமேதககத்திற்கு மாற்றாக அணியலாம். 

புதன், 28 மார்ச், 2018

அர்த்தநாரீஸ்வரர்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கிரிவலத்தில் இவ்வளவு சிறப்புகளா !

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில், வரலாற்று சிறப்பும், இதிகாசம் மற்றும் புராண சிறப்பும் கொண்ட தலமாகும். அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத #சுயம்புத் #திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். சிவ பெருமான் லிங்க வடிவமாக அல்லாமல் சுயம்புவாக காட்சி தருவது இங்கே தான்.

தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பர். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் போன்று திருச்செங்கோடு பவுர்ணமி கிரிவலத்திலும் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சித்ரா பவுர்ணமி முதலிய விஷேச காலங்களில் பக்தர்கள் இரவு 12 மணிவரை கிரிவலம் வந்து இறையருள் பெறுகின்றனர்.

மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம். கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கிமீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வார்கள்.

கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஆறுமுக சுவாமி கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோவில், நாமக்கல் சாலை, மலைசுத்தி சாலை, வாலரைகேட், பரமத்தி வேலு}ர் சாலை, சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக சுவாமி கோவிலை வந்தடைவர்.

நாமக்கல், ஈரோடு, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் செல்வார்கள்.

கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது. உடனே, தூங்க கூடாது. அது கிரிவல பயனை போக்கிவிடும்.

மனத்தூய்மையுடன் இறைவனை மனதில் நினைத்து நமச்சிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தவண்ணம் வரவேண்டும். காலணிகளை தவிர்த்தல் வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்லக்கூடாது.

திருச்செங்கோடு மலை ஓங்கார வடிவானது. ஓங்காரம் என்பது சிவ வடிவமானது. எனவே இந்த மலை சிவவடிவமானது. சிவனை வலம் வந்து பெரும் பலன் அத்தனையும் இந்த மலையை வலம் வருதலால் கிட்டும்.

பவுர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும் சிவராத்திரியிலும் பிறந்த (ஜன்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோடு மலையை கிரிவலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும். இந்த பௌர;ணமியில் குடும்பத்துடன் கிரிவலம் சென்று கடவுளின் அருளைப் பெற்றிடுங்கள். கார;த்திகை நட்சத்திரத்தில் வரும் கார;த்திகை மாத பௌர;ணமியும் மிகச் சிறப்பு வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த கார;த்திகை பௌர;ணமி நாளில் கிரிவலம் மேற்கொள்வது அளவற்ற பலன்களை தரக்கூடியது.

பௌர;ணமி கிரிவலம் :

கார;த்திகை மாத பௌர;ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பௌர;ணமியில் கிரிவலத்தை மேற்கொள்வது எண்ணிலடங்கா பலன்களை தரக்கூடியது.

கிரிவலத்திற்கு உகந்த நேரம் :

மாலை நேரத்தில் குறைந்த வெயிலில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு கிரிவலத்தை மேற்கொள்வது உடல் நலமும், ஆரோக்கியமும் மேம்படும்.

இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது. அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்திலுள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு ஒரு சான்றாகக் காட்சி அளிக்கின்றன.

சிவனின் இடப்பாகம் பெற அம்பாள் பூஜித்த லிங்கம், மூலஸ்தானத்திற்குள் உள்ளது. காலை, மதியம், மாலையில் நடக்கும் பூஜையின்போது மட்டும் இந்த லிங்கத்தை அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்து பூஜிப்பர். இந்த பூஜைகளை அம்பிகையே செய்வதாக ஐதீகம். உச்சிக்காலத்தில் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும்.

படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆதிசேஷன், மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது இவருக்கு தனியே கொடியேற்றி 10ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.

அர்த்தநாரீஸ்வரர் சதயம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருப்பதால், இந்நாளில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இவரை வணங்கி வரலாம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளிமீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்றூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. செங்கோட்டு வேலவர் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் உள்ளன.

நாகேஸ்வரரின் கருவறை, சிற்ப வேலைப்பாடுமிக்கது. கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாளி மீதுள்ள வீரர்களின் கற்றூண் சிற்பங்கள் உள்ளன. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிற்பங்கள் முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச்செல்வங்கள் ஆகும்.

bharathegopu.blogspot.com

பூஜை அறை

வாஸ்து முறைப் படி பூஜை அறை அமைப்பதற்கு மிகச் சிறந்த திசை வடகிழக்கு மூலையாகும் மேலும் வடக்கு, கிழக்குத் திசைகளிலும் பூஜை அரை அமைக்கலாம்.
ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும்.
வாஸ்து முறைப் படி பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். கதவுகளில் சிறுசிறு துவாரங்களை அமைத்து அதில் மணிகளைத் தொங்கவிடுவதால் நமைகள் உண்டு. மணியில் இருந்து வரும் ஓசையானது வீட்டிற்குள் சகல ஐஸ்வர்யங்களையும்கொண்டு வரும்.
வாஸ்து முறைப் படி பூஜை அறையின் வடகிழக்குப் பகுதியில் அதிக பாரத்தை வைக்க கூடாது மேலும் வடகிழக்கு மூலையில் மாடம் அமைப்பதும் சிறந்ததாகாது.
வாஸ்து முறைப் படி பூஜை அறையின் மேற்குச் சுவரில் பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள். விக்ரங்கள். படங்களைத் தவிர வேறு எந்த பொருளையும் வைக்கக் கூடாது. மேலும் இந்த சுவரில் ஜன்னல் வைப்பது சிறந்ததாகாது.
பூஜை அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைப்பது சிறந்தது. அப்படி ஜன்னல் அமைக்கும் போது அதன் வழியே சூரிய ஒளி பூஜை அறைக்குள் வரும், இதனால் நன்மைகள் உண்டாகும்.
கடவுள் படங்களை மேற்கு அல்லது தெற்குச் சுவரில் மாட்ட வேண்டும், அப்போது தான் அவை முறையே கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியிருக்கும், கடவுள் படங்கள் மாட்டப் பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்தப் பொருளும் மாட்டப் கூடாது.
பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மலர்கள் போடும்போது அந்தக் கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் விளக்குகளை தெற்கு அல்லது வடக்கு நோக்கி வைக்கக் கூடாது.

மாவிலைத் தோரணம்

சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். 

 
பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் மாவிலையால் கலசத்தில் உள்ள புனித நீரை  பக்தர்கள் மீது தெளிப்பர். இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது மாவிலை. மாவிலையில் லட்சுமி தேவி வசிக்கிறாள்.  
 
* விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள்  விரைவில் தீர வழிபிறக்கும்.
 
* லக்ஷ்மி கடாக்ஷம்
 
* எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
 
* நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்
 
* தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்
 
* மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது.
 
* பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது. 
 
மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.

கந்த சஷ்டி கவசம்

சஷ்டி கவசத்தில் புதிரான வரிகள்

கந்தசஷ்டி கவசம் பாடும்போது, "ஐயும் கிலியும்அடைவுடன்சௌவும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்கிலியும்சௌவும் கிளரொளி ஐயும் நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்' என்ற வரிகள் வருகின்றன. இதன் பொருள் பலருக்கும் தெரியவில்லை. ஐயும்(ஐம்), கிலியும் (க்லீம்) சௌவும் (ஸெளம்)ஆகியவை "பீஜாக்ஷரங்கள்' எனப்படும். இதை "பீஜம்+அட்சரம்' என பிரிப்பர்."பீஜம்' என்றால் "உயிர்ப்புள்ள விதை'. "அட்சரம்' என்றால்"எழுத்து'. "<உயிர்ப்புள்ள எழுத்து விதைகள்' ஒன்று சேர்ந்தால் அது "மந்திரம்' ஆகிறது. அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது வளர்ந்து பக்தியின் <உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்குச் செல்பவன் இறைவனின் காலடியை அடைவான்."ஐம், க்லீம் என்ற மந்திர எழுத்துக் களும், உயிர்களை எல்லாம் உய்விக்கும் ஒளிபொருந்திய "ஸெள' என்ற மந்திரஎழுத்தும், எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும்...இப்படி பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின் (சரவணபவ, குமாராயநம) மூலாதார எழுத்துக்குரிய நாத தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே! என் மனக்கண் முன், தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும்,' 'என்பது இந்த வரிகளின் பொருள். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான "சரவணபவ' உடன் "ஓம் ஐம் சரவணபவாய நம', "ஓம் க்லீம் சிகாயை வஷட்', "ஓம் ஸெளம் சுப்ரமண்யாய நமஹ'என்று மந்திரங்களைச் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை எல்லாரும் சொல்லக்கூடாது. ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, தகுந்த நியமநிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும். இது சாத்தியம் இல்லை என்பதால், கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராயசுவாமிகள், தனது பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சேர்த்து விட்டார். இந்த வரிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தமாகிறது. நமது முக்திக்காக நம் மகான்கள் செய்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஆயுள் ரேகை

ஆயுள் ரேகை 

பார்ப்பவர்களால் ஒருவகையில் மிகவும் கருத்துவேறுபாடுகளைக் கொண்ட ரேகையான ஆயுள் ரேகை. இது கட்டைவிரலுக்கும் மேலே உள்ளங்கையின் விளிம்பில் இருந்து தொடங்கி, மணிக்கட்டை நோக்கி ஒரு வில்லைப் போல பயணிக்கிறது. இந்த ரேகை ஒருவரின் ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் மற்றும் பொதுவான ஆரோக்கியத்தையும் குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆயுள்ரேகையானது, பேரழிவு நிகழ்வுகள், உடல் காயங்கள் மற்றும் இடமாற்றங்கள் உட்பட, முக்கியமான வாழ்க்கை மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது. ஒருவரின் ஆயுள்ரேகையின் நீளம் அவரின் வாழும் காலத்தோடு தொடர்புபட்டிருப்பதாக பொதுவாக கூறப்படுவதை நவீன கைரேகை சாத்திர நிபுணர்கள் நம்புவதில்லை. 

இது சிலரது கைகளில் தடிமனாகவும், ஆழமாகவும், சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருக பலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தை யும் குறிப்பிடும். தெளி வாகவும், மெல்லி யதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, நல்ல தேக பலத்தையும், ஆரோக் கியத்தையும் கொடு க்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமை ந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றா கவும் சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவும் இருக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர் வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ் வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடிய வர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர். 

புத்தி ரேகை



மனிதனை உயர்ந்த ஜீவனாக்குவது அவனது ஆறாவது அறிவாகும். மனித உடலில் புத்தி அல்லது அறிவாற்றலைக் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை. ஒருவனது அறிவு, விவேகம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரது வாழ்க்கை அமையும் விதத்தை, புத்தி ரேகையின் அமைப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
புத்தி ரேகை எனப்படுவது ஆயுள் ரேகைக்கு மேலே குரு மேட்டுக்கு கீழிருந்து ஆரம்பித்து நேராக உள்ளங்கையின் புதன் மேட்டுக்கு கீழே உள்ள செவ்வாய் மேட்டில் முடியும் ஒரு ரேகையாகும். சிலசமயம் இந்த ரேகை செவ்வாய் மேட்டிலோ, சந்திர மேட்டிலோ முடிவடையலாம். இந்தப்புத்தி ரேகை தான் ஒருவருடைய அறிவாளித்தனம், நீதி, நேர்மை, மனநிலைமைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தப் புத்தி ரேகையைத்தான் பிரதானமாக ஆராய வேண்டும்.
அறிவாளிகள் கையில் இந்தப் புத்தி ரேகையான மிகவும் எடுப்பாகவும், மெலிந்தும் காணப்படும். எவ்வித வளைவுகளோ, கோணல்களோ இல்லாது காணப்படும். இவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகளாக விளங்குவர். சமுதாயத்தில் செல்வம், செல்வாக்கு, புகழ் ஆகியவற்றைப் பெற்று இருப்பார். 
இந்த ரேகை மெலிந்து எடுப்பாக அமையாமல் தடித்து காணப்பட்டால் எல்லாவற்றிலும் முட்டாள்தனமாகவும், பரபரப்பாக நடந்து கொள்கிறவர்களாகவும் இருப்பார்கள்.
புத்தி ரேகையானது ஆயுள் ரேகை வரை வந்து அதன் பின்னர் மணிக்கட்டை நோக்கி திரும்பி இருந்தால் எதிலும் நிதானப்போக்கு இல்லாதவர்களாகவும், உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், முன் எச்சரிக்கையுடன் செயல்படுபவராகவும் இருப்பார்கள்.
ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கை வழியே சென்று புத்தி ரேகை கிளைகளாகப் பிரிந்துவிடலாம். இப்படி இருக்குமேயானால் புத்தி ரேகை அமைந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வி, கலை, பொது அறிவு அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். ஏதாவது ஒரு திறமையைப் பயன்படுத்தி, வெற்றி காணும் வாய்ப்பு இவர்களுக்கு நிறைய உண்டு.
ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் இணைந்து உடனேயே பிரிந்து உள்ளங்கையின் அடிப்புறத்தை நோக்கி சாய்ந்து செல்லுமானால் கலைஞர்களாக இருப்பார்கள். 
புத்தி ரேகையும், ஆயுள் ரேகையும் தனித்தனியே பிரிந்திருக்குமேயானால் தற்பெருமை உடையவர்களாக இருப்பார்கள். என்றாலும் தன்னம்பிக்கை இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இவர்கள் அதிகமாகப் பேசுவார்கள்.

செவ்வாய், 27 மார்ச், 2018

ராசி கல்

ராசி கற்கள் என்பது இன்றைய காலத்தில் பலரது நம்பிக்கையாகி வருகிறது. சரியான ராசி கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமல்ல ஏற்றங்களும் நிகழும்.  ராசிக்கல் நமது உடலையும் மனதையும் நமது ராசி கிரகத்துக்கு ஏற்ப ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக வேதங்கள் சொல்லுகின்றன. ஆனால் ராசிக்கல்லை தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.  எந்தெந்த ராசி காரர்களுக்கு எந்தெந்த ராசி கல் பொருத்தமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்று. நமது ராசிக்கு பொருத்தமில்லாத ராசி கல்லை நாம் அணிவதன் மூலம் நன்மைகள் நடக்காதது மட்டுமல்ல சிலசமயம் சில ஆபத்தான விளைவுகளைக் கூட தப்பான ராசிக் கல் ஏற்படுத்தலாம். ஆகவே  நமது பிறப்பு ராசியைப் பொறுத்து சரியான ராசிக் கல்லை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராசிக் கற்கள் பொருத்தமானவை என்று இப்போது பார்ப்போம்…

மேஷம் – பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும். பவளம் (Precious coral அல்லது red coral) என்பது கோரல்லியம் ரூப்ரம் (Corallium rubrum) என்ற உயிரினத்தின் பொதுப் பெயராகும். இதன் வெளிப்புற ஓட்டின் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமே இதன் தனித்தன்மையாகும். பவளம்  ஒரு நவரத்தினம். இது நகைகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
ரிஷபம் – வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும். வைரம் அல்லது Diamond மிக பிரபலமான ராசி கல்.
மிதுனம் – மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. எமரல்ட் (emerald) என்ற ஆங்கிலப் பெயர் பச்சை நிறம் என்ற பொருள்படும் மரகதம் .
கடகம் – முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது. முத்து அல்லது Pearl  ஒரு பரவலாக பயன்படுத்தப்படும் ராசிக் கல்லாகும்.
சிம்மம் – மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
கன்னி – மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
துலாம் – வைரம் (Diamond):
துலாம் – வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம் – பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு – கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் – நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
கும்பம் – நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
மீனம் – கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.