புதன், 4 ஏப்ரல், 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம்

பஞ்ச பட்சி சாஸ்திரம்



இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங்கித் தொழுது விட்டு இதை ஆரம்பிக்கிறேன்.

      பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை  அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு  சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.

பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையே 

வல்லூறு 



ஆந்தை



காகம்



கோழி



மயில் 



முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.

ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-

வல்லூறு

அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்     
         
ஆந்தை

திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்    
              
காகம்

உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்    
                           
கோழி

அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்     
                        
மயில்

திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி


 இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.

வளர்பிறை

அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.) 

இ, ஈ - ஆந்தை

உ, ஊ - காகம்

எ, ஏ - கோழி

ஒ, ஓ - மயில்



தேய்பிறை

அ, ஆ - கோழி 

இ, ஈ - வல்லூறு

உ, ஊ - ஆந்தை

எ, ஏ - மயில்

ஒ, ஓ - காகம்


         ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்

அரசு  - 100% பலம்
ஊண் - 80%      “
நடை -   50%    “
துயில் - 25%    “
சாவு     - 0%     “


         ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. 

       இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை,  புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.

வளர்பிறை - படுபட்சி நாட்கள்

வல்லூறு - வியாழன், சனி

ஆந்தை - ஞாயிறு, வெள்ளி

காகம் - திங்கள்

கோழி - செவ்வாய்

மயில் - புதன்


தேய்பிறை படுபட்சி நாட்கள் 


வல்லூறு -செவ்வாய்

ஆந்தை -திங்கள்

காகம் -ஞாயிறு

கோழி -வியாழன், சனி

மயில் -புதன், வெள்ளி


       அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-

வளர்பிறை

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன், திங்கள்

காகம் - வியாழன்

கோழி - வெள்ளி

மயில் - சனி


இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - வெள்ளி

ஆந்தை -ஞாயிறு

காகம் -ஞாயிறு, செவ்வாய்

கோழி - திங்கள், புதன் 

மயில் -வியாழன் 



தேய்பிறை

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -வெள்ளி

ஆந்தை - வியாழன் 

காகம் -புதன்

கோழி - ஞாயிறு, செவ்வாய்

மயில் - திங், சனி


இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன்

காகம் - வியாழன்

கோழி - திங்கள், சனி 

மயில் -வெள்ளி
 


      இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.

    அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்

அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.


        இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.

           அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள்,  அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.

                  தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள்,  அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.

படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம  என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.

நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த  திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.

பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.

உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும். 

அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

வல்லூறு - வளர்பிறை



நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி 


வல்லூறு - தேய் பிறை



நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி
 

ஆந்தை - வளர்பிறை



நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி


ஆந்தை - தேய்பிறை



நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்


காகம் - வளர்பிறை



நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்


காகம் - தேய்பிறை



நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி


கோழி - வளர்பிறை



நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு 


கோழி - தேய்பிறை



நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு


மயில் - வளர்பிறை



நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்


மயில் - தேய்பிறை



நட்பு :  வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்


ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.

நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.

“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி  நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.

பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.


மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.

நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.


         பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.

ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.


பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.

1)   உடலிலிருந்து நோய் நீக்குதல்
2)   பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3)   மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4)   பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5)   எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6)   பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7)   போட்டிகளில் வெற்றியடைதல்
8)   எதிரிகளை வெல்லுதல்
9)   தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்

பஞ்ச பட்சி சாஸ்திரம்

வறுமை நீக்கும் பஞ்சாட்சி சாஸ்திரம்

பஞ்ச பூதங்கள் இந்த உலகத்தை இயக்குகின்றன. பஞ்சபூதங்கள் இறையருளால் இயங்குகின்றன. உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு பொருளும், பஞ்சபூதத்தால் அல்லது பஞ்ச பூதத்தின் ஒரு கூறினால் ஆனவையே. உருவாயும், அருவமாயும் பஞ்சபூதமுள்ளது. நிலம், நீர் தீ, காற்று, வெட்டவெளி புறமாகிய அண்டத்தில் இருப்பது போல் பிண்டமாகிய நமது உடலாகவும், உடலுக்குள்ளும் உள்ளது. முன்வினைச் செயல்களால் ஏற்படும் விளைவுகளோ அல்லது சாபம், பாபம், தோணம் இவற்றால் ஏற்படும் சரிவுகளோ, வாழ்க்கை துன்பங்களோ பங்சபூதங்களினால் அல்லது பஞ்சபூத ரூபத்தினால் நம்மைத் தாக்கி துன்புறுத்துகின்றன. பஞ்சபூத இயக்க அசைவுகளை அல்லத அதன் விளைவுகளை நமக்கு சாதகமாக மாற்றிவிட்டால் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம்.

இப்படி பஞ்ச பூத இயக்கத்தை செயல்பாட்டை நமக்கு சாதகமாக, சுலபமாக மாற்றிட, மனுபவித்தில் வெற்றிபெற, செல்வம் பெருபிட சித்தர்கள் நமக்கு வழங்கிய அற்புதக்கலையே பஞ்சபட்சி சாஸ்திரம்.

பஞ்சபட்சி

பஞ்சபட்சி சாஸ்திர குறியீடாக ஐந்து பறவைகளை வைத்தார்கள். உருவகித்தார்கள். அவையே 1. வல்லாறு    2. ஆந்தை 3. காகம். 4. கோழி 5.மயில் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் எல்லா செயல்களையும் நமக்கு சாதகமாக்க, அஷ்ட கர்மச் செயல்களும் செய்ய வழிவகை இருந்த போதும் செல்வம், பெருக, பஞ்சம், வறுமை நீங்கிட உள்ள வழியை இங்கு பார்ப்போம்.

பஞ்சபட்சி பார்க்கும் விதம்

நீங்கள் அமாவாசை தொடங்கி, பௌர்ணமிக்கு பிறந்தவரா? அப்படியென்றால் உங்களது பட்சி எது என்று பார்க்கும் முறை இதோ.

வல்லாறு பட்சி

அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். நட்சத்திரம் தெரியவில்லையா ? கவலையில்லை. ஆ. ஆ ஒள முதல் எழுத்தாய் கொண்டவர்களுக்கு வல்லாறுதான் பட்சியாகும். உதாரணமாக அருணாசலம், கந்தசாமி, கார்த்திகேயன், தங்கசாமி, ராம்குமார், கமலா, தருண், பரமேஸ்வரன், லட்சுமி, லாரன்ஸ் இப்படி அ, ஆ கூட்டெழுத்து முதல் எழுத்தாய் உள்ளவர்கள்.

ஆந்தை பட்சி

திருவாதிரை, புனர்பூகம், பூசம் ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆந்தை பட்சிக்கு சொந்தக்காரர்கள். இ.ஈ முதல் எழுத்தாய் உள்ளவர்கள் ஆந்தை பட்சிக்கார்கள். உதாரணமாக கிருஷ்ணன், திருநாவுக்கரசு, பிரமிளா, ரிஷி, ரீட்டா, சிந்த இப்படி இ,ஈ, கூட்டெழுத்தாய் அமைந்தவர்களும் ஆந்தை பட்சிக்காரர்களே

காகம் பட்சி

உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்கள் காகப்பட்சியினைக் கொண்டவர்கள். பெயரில் முதல் எழுத்து உ.ஊ அமைந்தவர்களும் காகப் பட்சிக்காரர்களே, உதாரணமாக உசேன், உண்ணாமலை, முத்துச்சாமி, ருக்மணி, குமார்.

கோழிப்பட்சி

அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோழிப்பட்சிக்காரர்கள். பெயரின் முதல் எழுத்தாய் எ, ஏ, கொண்டவர்களின் கோழிப்பட்சிக்குரியவர்கள். உதாரணமாக ஏழுமலை, தெட்சிணாமூர்த்தி, பெருமாள், தெய்வானை, மேரி, ஜெயலலிதா.

மயில் பட்சி

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயில் பட்சியின் ஆட்சி உள்ளவர்கள்.  பெயரின் முதல் எழுத்தாய் ஒ,ஓ கொண்டவர்கள் மயில் பட்சிக்குரியவர்களே.

உதராணமாக கோகுல், கோபால், கோவிந்தம்மாள், ஜோசப் இதுவே தேய்பிறையில் அதாவது பௌர்ணமியில் அடுத்த நாளிலிருந்து அமாவாசைக்கு முதல் நாளுக்குள் பிறந்திருந்தால் எல்லாமே மாறிவிடும். அதன் விவரம் வருமாறு :-

தேய்பிறைக்கு பட்சிகள்

 பட்சிநட்சத்திரம்பெயரின் முதல் எழுத்துபட்சி மூலிகை லட்சமி கபாட்ஷம்         
1.வல்லாறு
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி இ, ஈதகரை

2.ஆந்தை
உ,ஊ
 ஜோதிப்பு (அ)மிளகு சாரணை
3.காகம்
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு)ஒ,ஓவெள்ளருகு (அ)குப்பைமேனி

4.கோழி
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம், பூசம்ஆ, ஆ, ஐ, ஒளநீலசங்குபுஷ்பம் கொடிவேலி

5.மயில்
ஆயில்யம், மகம், பூரம்,  பரணி, கிர்த்திகை, ரோகினி,  மிருக சீரிஷம்எ, ஏவெள்ளெருக்கு(அ) நத்தைசூரி

குறிப்பு:-  மூலிகைகளுக்கு முறையாக காப்புக்கட்டி, சாப நிவர்த்தி, பூஜை முறைகள் முழுமையாக முடிக்கப்பட்டு எடுக்கப்பட்டு மேற்கண்ட மூலிகைகளின் வடக்கு வேர் அல்லது ஆணிவேர்.

வளர்பிறையில்

வல்லாறு பட்சிக்கான மூலிகை – விஷ்ணு கரந்தை (நீல நிற பூ)

ஆந்தை பட்சிக்கான மூலிகை – ஆடையட்டி அல்லது தொட்டாற்சிணுங்கி

காகம் பட்சிக்கான மூலிகை – கருந்துளசி அல்லது கருநொச்சி

கோழி பட்சிக்கான மூலிகை – பவளமல்லி அல்லது அழுகண்ணி

ஆந்தை பட்சிக்கான மூலிகை – ஆடையட்டி அல்லது தொட்டாற்சிணுங்கி

மயில் பட்சிக்கான மூலிகை – பலா மரத்தின் வேர் அல்லது வில்வமர வேர்.

படுபட்சி

மேற்கண்ட மூலிகைகளை எடுக்கும்போது படுபட்சி நாள் தவிர்த்து மற்ற

நாட்களில் எடுத்தால்தான் முழுப்பலன் கிடைக்கும். படுபட்சி நாளில் எடுத்தால்

மூலிகை சிறிதும் பலன் தராது என்பதை அறியவும். படுபட்சி என்றால் அந்த பட்சி

மரணமுற்ற அதாவது பலன் இல்லாத, எதிர்மறை பலன்தரும் நாளாகும்.

படுபட்சி விவரம்



பட்சிவளர்பிறைதேய்பிறை
1.வல்லாறு வியாழன், சனிசெவ்வாய்
2.ஆந்தை ஞாயிறு, வெள்ளிதிங்கள்
3.காகம் திங்கள்ஞாயிறு
4.கோழி செவ்வாய்வியாழன், சனி
5.மயில்  புதன்வெள்ளி, புதன்


வளர்பிறை மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்மேற்குறித்த நாட்களில் அந்தந்த பட்சிக்கு உள்ளவர்கள் அந்தந்த நாட்களைத் தவிர்த்து மூலிகைகள் எடுக்க, தொழிற் செய்ய நற்பலன்களைப் பெறலாம்.


பட்சிநாள்நேரம்
1.வல்லாறுவெள்ளிகாலை 6.00 முதல் 6.45
2.ஆந்தைபுதன்காலை 6.00 முதல் 6.30
3.காகம்வியாழன்காலை 6.00 முதல் 6.30
4.கோழிபுதன்காலை 6.00 முதல் 6.48
5.மயில்வியாழன்காலை 6.00 முதல் 6.48

தேய்பிறை மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்


பட்சிநாள்நேரம்1.வல்லாறுவெள்ளிகாலை 6.00 முதல் 6.45
2.ஆந்தைபுதன்காலை 6.00 முதல் 6.30
3.காகம்வியாழன்காலை 8.23 முதல் 8.42
4.கோழிபுதன்காலை 8.23 முதல் 8.42
5.மயில்வியாழன்காலை 8.23 முதல் 8.42

குறிப்பு

நேரம் சூரிய உதயம் காலைர. 6.00 மணி என கணக்கிடப்பட்டு பலன் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மூலிகை எடுக்கின்ற நாளில் சூரிய உதயத்தை சரியாகக் கணக்கிட்டு, சரியான நேரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக வல்லாறு பட்சிக்கு உரியவர் மூலிகை எடுக்க வெள்ளிக்கிழமை சூரிய உதயம் காலை 5.47க்கு என இருந்தால் 5.47ல் இருந்து 6.32க்குள் மூலிகை எடுத்துவிட வேண்டும்.

அதேபோன்று மூலிகையை தாயத்து (குளிசம்) உள்ளே அடைத்து மூடும்போது இதேபோல் நேரம் அறிந்து உள் அடைக்கவும். நீங்கள் உங்கள் குல தெய்வத்தையும், உங்கள் இஷ்டதெய்வத்தையும் வணங்கி மூலிகையை எடுத்து தாயத்தில் அடைத்து அணிந்து கொள்ள வறுமை நீங்கி செழுமையான வாழ்க்கை வாழலாம். செல்வ கபாட்சமும், நல்ல வருவாய் வருவதையும் அனுபவத்தில் உணரலாம்.

திருமண நிலை

காதல் திருமணம்.... விவாகரத்து - ஜாதகத்தில் குரு,சுக்கிரன் எங்க இருக்கார் தெரியுமா?


சென்னை: இன்றைய கால கட்டத்தில் ஆடம்பரமாக திருமணம் செய்கின்றனர். அதே  காதல், கலப்பு திருமணம், கள்ளக்காதல், விவாகரத்துக்கு காரணம் என்ன என்று ஜாதக ரீதியாக அறிந்து கொள்வோம்.

ஜாதகத்தில் 2ம் வீடு குடும்ப ஸ்தானம் 7ம் வீடு களத்திர ஸ்தானம் இந்த வீட்டிற்கு குரு, சுக்கிரன், சந்திரன். பாப கிரகங்கள் சனி, ராகு கேது, செவ்வாய். மகரராசி, கும்பராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்தும், மேஷராசி, விருச்சிக ராசிக்காரகளுக்குச் செவ்வாயிடமிருந்தும் விதிவிலக்குகள் உண்டு. காரணம் இந்த ராசியின் வீட்டு அதிபதிகள் இவர்கள்.

சிலருக்கு திருமணம் தாமதமாகிறது. சிலருக்கோ காதல் திருமணம் நடக்கிறது. சிலருக்கோ கள்ளக்காதலும் அதனால் சிக்கல்களும் ஏற்படுகிறது. பெரும் பணக்காரர்களோ... பிரபல நட்சத்திரங்களோ ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு அதே வேகத்தில் விவாகரத்து செய்கின்றனர்.

சுக்கிரனுடன் கிரகங்கள்

எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 இடங்களில் தனித்து இருப்பது. குறிப்பாக மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாறு தனித்த குரு இருப்பது காதல் திருமணம் செய்ய காரணமாகும்.

கணவன் மனைவி பிரச்சினை

லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டி வரும்.

கலப்பு திருமணம்

ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்குரியவன் ஆகிய இரண்டு இடங்களில் ராகு-கேது சம்பந்தம் ஏற்பட்டால் கலப்புத் திருமணம். களத்திரகாரகன் சுக்கிரனுடன் ராகு-கேது சேர்க்கை பெற்றால் காதல் திருமணம். ஏழாம் இடத்தில் கேது இரு

கல்லில் கடவுள்

மனிதனை இறைவனோடு தொடர்பு கொள்ளச் செய்வதே மூலவர் தான்.

மூலவருக்குரிய சிலையை விஞ்ஞான அடிப்படையில் வடிவமைக்க வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.

இது தொடர்பான குறிப்புகளை அவர்கள் ரிக் வேதத்தில் எழுதி வைத்துள்ளனர்.

ஆலயங்களில் உள்ள மூலமூர்த்தி சிலா விக்கிரகம், சுதை மூர்த்தி, தாருக மூர்த்தி என்று மூன்று வகைப்படும்...

சிலா விக்கிரகங்கள் என்பவை கல் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கும்.

சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகை கலவைகளை சேர்த்து, அதனுடன் தேன், சுண்ணாம்பு கலந்து உருவாக்கப்பட்டதாக இருக்கும்.

தாருக மூர்த்தி என்பது மரத்தினால் செய்யப்பட்ட மூல அமைப்பாக இருக்கும்.

இத்தகைய மூலவர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான ஆலயங்களில் காணலாம்.

ஆனால் 99 சதவீத மூலவர் சிலைகள் கருங்கல்லில்தான் இருக்கும்.

ஆதிகாலத்தில் ஆலயங்கள் தோன்றும் முன்பே மூலவர்களை வடிவமைக்கும் கலையை தமிழர்கள் கற்றுக் கொண்டு விட்டனர்.

மலைக்காடுகளில் சுற்றித் திரிந்த அவர்களுக்கு எங்கு பார்த்தாலும் கருங்கற்களைத் தான் காண முடிந்தது.

எத்தனை நாட்களுக்குத் தான் அந்த கற்களையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அந்த கற்களில் இறை வடிவங்களை செதுக்கத் தொடங்கினார்கள்.

அதன்பிறகு தான் கருங்கல்லில் பஞ்சபூதங்களும் இருக்கும் அறிவியல் உண்மையை அறிந்தனர்.

நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று – இந்த ஐந்தும் தான் பஞ்சபூதங்கள்.

ஒரு கல்லை மற்றொரு கல்லுடன் உராய்ந்தால் தீ வரும். எனவே தீ கருங்கல்லில் உள்ளது.

கருங்கற்கள் பொடி, பொடியாக நொறுங்கும் போது மண்ணாக மாறுகிறது. இது நிலத்தை காட்டுகிறது.

மலைக்காடுகளில் பார்த்தால் கல்லுக்குள் இருந்து தான் தண்ணீர் ஈரமாக கசிந்து வெளியில் வரும்.
ஆக கல்லுக்குள் தண்ணீரும் இருக்கிறது.

கல்லுக்குள் தேரை உள்ளிட்ட உயிரினங்கள் வாழும். இதன் மூலம் கருங்கல்லில் ஆகாயமான வெற்றிடமும், சுவாசிக்க காற்றும் இருப்பது உறுதியாகிறது.

இப்பிரபஞ்சத்தை காக்கும் கடவுளுக்குரிய மூலவர் சிலை, பஞ்சபூத சேர்க்கையோடு தொடர்பு கொண்டதாக இருத்தல் வேண்டும் என்று சிந்தித்த தமிழர்களுக்கு கருங்கல் ஒன்றே அவர்களின் தேர்வாக இருந்தது.

எனவே கருங்கற்களில் மூலவர் விக்கிரங்களை செய்தால், அவற்றில் மிக எளிதாக இறை சக்தியை ஏற்படுத்தி, அதன் மூலம் அலைகளை பெருக்க செய்து பயன்பெற முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் தான் கருவறைகளில் மூலவர் விக்கிரகங்கள் கல்லால் வடிவமைக்கப்பட்டவைகளாக அமைந்தன.

அதே சமயத்தில் வீதி உலா செல்லும் உற்சவர் மூர்த்தியை பஞ்சலோகங்களால் செய்தனர்.

வெளி இடங்களில் உள்ள சக்தியை கிரஹித்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உற்சவர் சிலைகள் உலோகத்தில் செய்யப்பட்டன.

நாளடைவில் மூல விக்கிரகங்களுக் குரிய கற்களை கண்டுபிடித்து தேர்வு செய்து, அதில் சிலை செய்து, அதற்கு இறை சக்தி ஏற்படுத்தும் நுட்பத்தையும், சூட்சமத்தையும் தமிழர்கள் தெரிந்து கொண்டனர்.

எனவே, ஆயிரம் ஆண்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயங்களில் உள்ள மூல விக்கிரகங்கள், சிற்ப சிறப்புகள் மட்டுமின்றி, அதன் பின்னணியில் இறை ஆற்றலை வாரி வழங்கும் தன்மைகளை நிரம்ப கொண்டுள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா கருங்கல்லும் இறை ஆற்றலை வெளிப்படுத்தாது.
கருங்கல்லில் சூரிய காந்தக்கல், சந்திர காந்த கல், அலிக்கல் என்று மூன்று வகைகள் உள்ளன.

சூரிய காந்த கற்கள் எப்போதும் சூடாக இருக்கும். இந்த வகை கல்லில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் கடவுள்களான சிவன், வீரபத்திரர், துர்க்கை, காளி போன்ற இறை வடிவங்களை செதுக்குவார்கள்.

சந்திரகாந்த கல் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
எனவே இந்த வகைக் கல்லில் பெருமாள், புத்தர், தட்சிணாமூர்த்தி போன்ற கடவுள்களின் வடிவங்களை செய்வார்கள்.

அலிக்கல் என்பது சூடாகவும் இருக்காது. குளிர்ச்சியாகவும் இருக்காது. கல்லைத் தட்டும் போது ஓசையும் வெளியில் வராது. இத்தகைய கற்களில் எந்த மூலவர் சிலையையும் செய்ய மாட்டார்கள்.

மூலவர்கள் சிலைகள் பொதுவாக நிற்கும் நிலை (ஸ்தானகம்) அமர்ந்திருப்பது (ஆசனம்) படுத்து இருப்பது (சயனக் கோலம்) என்று மூன்று வகையாக தயாரிப்பார்கள்.

இந்த மூவகை மூலவர்களை எவ்வளவு உயரம், எவ்வளவு அகலத்தில் படைக்க வேண்டும் என்பதற்கு சிற்ப சாஸ்திர விதிகள் உள்ளன.

சிற்ப கலையில் நவதாலம் என்று ஒரு அமைப்பு உண்டு. இதன்படி மூலவர் சிலை முகத்தின் நீளத்தை போல 9 மடங்கு சிலையின் மொத்த உயரம் இருக்க வேண்டும் என்பது அந்த அமைப்புக்குரிய விதியாகும்.

இப்படி அனைத்து விதிகளுடன், சிற்பி தன் கைத் திறமையையும் காட்டும் போது தான் பிரமாதமான மூலவர் சிலை கிடைக்கும்.

அதற்காக கல்லே கடவுள் ஆகிவிடாது. கல்லிலும் கடவுள் இருக்கிறார் என்பதையே பிரபஞ்ச உண்மை நமக்கு காட்டுகிறது.

பிறகு எப்படி கல் முழுமையான இறை சக்தியை பெறுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்......

சிற்பி செதுக்கும் மூலவர் சிலையை பல வகையான தானியங்கள் ஒவ்வொன்றிலும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் வைப்பார்கள்.

தண்ணீருக்குள்ளும் அந்த சிலை ஒரு மண்டலம் வைக்கப்படும்.

இதன் மூலம் அந்த சிலை, காஸ்மிக் கதிர் சக்தி கொண்ட பிரபஞ்ச சக்தியை மிக, மிக எளிதாக பெற்று விடும்.

இதையடுத்து சிலைக்கு கண் திறக்கப்படும். இதற்கு சில நியதி உள்ளது. கண் திறக்க முதலில் ‘ரத்ன நியாசம்’ எனப்படும் ஆராதனை செய்வார்கள்.

பிறகு சிலையின் தலை, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, கைகள், பாதங்களில் நவரத்தினங்களை வைத்து பூஜை செய்வார்கள்.

பால் நிவேதனம் செய்து தூப, தீப ஆராதனை காட்டுவார்கள்.
பின்னர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும். இதையடுத்து கலச பூஜை நடத்துவார்கள்.

கருவறையில் எந்த மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளாரோ. .. அதற்கான மந்திரத்தை ஜெபித்து பூஜை செய்வார்கள்.

பின்னர் ஸ்தபதி விராட் விஸ்வ பிரம்மனை நினைத்துக் கொண்டு, தங்க ஊசி மூலம் சிலை கண்ணைத் திறப்பார்கள்.

முதலில் வலது கண்ணையும், பிறகு இடது கண்ணையும் திறக்க வேண்டும். சிலைக்கு கண்கள் திறக்கப்படும் போது ஸ்தபதியை தவிர வேறு யாரும் அருகில் இருக்கக் கூடாது.

நான்கு புறமும் திரையிட்டு, திரை உள்ளேயே தீபம் காட்டி, பால், பழம், தேன் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

சிலைக்கு கண்கள் திறக்கப்பட்டதும், முதலில் கண்ணாடி, பசுவின் பின்பாகம், ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பெண்கள், நெற்கதிர்கள், நவதானியங்கள், சன்னியாசி, வேதவிற்பனர் என்ற வரிசையில் மூலவர் பார்வைபடும்படி செய்ய வேண்டும்.
இறுதியில் தான் பக்தர்கள் மூலவர் பார்வையில் படுதல் வேண்டும்.

ஆக கருவறையில் மூலவர் சிலையை நிலை நிறுத்துவதில் இவ்வளவு நியதிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை நம் முன்னோர்கள் 4 வகையாக பிரித்து வைத்துள்ளனர்.

தேவர்கள் செய்யும் பிரதிஷ்டைக்கு தைவீகம் என்று பெயர்.

அசுரர்கள் பிரதிஷ்டை செய்தால் அதை அசுரம் என்பார்கள்.

ராஜாக்களும், பக்தர்களும் முயன்று மூலவரை பிரதிஷ்டை செய்தால் அதற்கு மானுஷம் என்று பெயர்.

ரிஷிகள் செய்யும் பிரதிஷ்டைக்கு ஆர்ஷம் என்று பெயர்.

இவற்றின் தத்தவத்தை உணர்ந்ததால்தான் ஆதிசங்கரர், ராமானுஜர், நால்வர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வாரியார் போன்ற ஞானிகள் மூலவர் சிலையை கண்டதும் பரவசமாகி அங்கு இறை ஒளியை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

தமிழ் புத்தாண்டு ராசிபலன் மகரம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்


விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் மகரம். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரனும் புதனும் சேர்ந்திருக்கிற நேரத்தில் விளம்பி வருடம் பிறப்பதால்,  இந்த ஆண்டு உங்களுக்கு அமோகமாக அமையும். உங்களுக்கு பாக்கியாதிபதியாக இருக்கிற புதன் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருப்பதால், இந்த ஆண்டு பணவரவு சிறப்பாக இருக்கும்.
உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியாக இருக்கிற சுக்கிரன் 4-ம் இடத்தில் இருப்பதால்,  சிலருக்கு வீடு மாறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வேறு சிலர் சொந்தமாக வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்கிற வாய்ப்பும் ஏற்படும். ராசிக்கு 10-ம் வீட்டில் குரு இருப்பதால், சின்னச் சின்ன தொந்தரவுகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதனால் வேலையில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

ஆனால், அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த தடைகள்  எல்லாம் விலகும். நீண்ட நாள் தள்ளிப்போன காரியங்கள் எல்லாம் எளிதாக முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை  உங்கள் ராசிக்குள்ளேயே  கேது நிற்பதால், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகு 7-ல் நிற்பதால், கணவன்-மனைவிக்குள் கசப்புஉணர்வு ஏற்படும். தேவையற்ற மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். அதனால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.  ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

உங்களுடைய ராசிக்குள்ளேயே மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை செவ்வாயும் வந்து அமர்வதால், உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது  நல்லது.
அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து குருபகவான் உங்களுக்குச் சாதகமான இடத்துக்கு வருகிறார். அவருடைய அனுகிரகம் இருப்பதால் எல்லா விஷயங்களிலும் நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள்.

உங்களின் ராசிநாதனான சனிபகவானைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டி ஏழரைச்சனியாக இருப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. பெரிய முடிவுகள், வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் ஆகியவற்றை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். கூடுமானவரை அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இந்த விளம்பி வருடத்தைப் பொறுத்தவரை கணவன், மனைவிக்குள் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் வந்துபோகும். பிள்ளைகள் விஷயத்திலும் கொஞ்சம் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தீர்கள் என்றால், இந்த ஆண்டு மிகச்சிறப்பாகவே அமையும். குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம்வரை சுக்கிரன் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், பணவரவு நன்றாக இருக்கும். ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வியாபாரத்தைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரம் பெருகும். விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையாட்களும் உங்கள் பங்குதாரர்களும் நீங்கள் விரும்பியபடி நடந்துகொள்வார்கள். புதிய பங்குதாரர்களை சேர்க்கும் வாய்ப்பும் இருக்கிறது.

ஏழரைச்சனி நடப்பதால், மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படிப்பில் ஈடுபடுவது நல்லது. அக்டோபருக்குப் பிறகு நீங்கள் எழுதும் தேர்வுகளில் உங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்.

பெண்கள் தங்களின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றபடி பெண்களுக்கு இந்த ஆண்டு எல்லா வகையிலும் சிறப்புமிக்க ஆண்டாக அமையும்.

உத்தியோகத்தில் அலட்சியத்துடன் செயல்படவேண்டாம். குறிப்பாக அக்டோபர் 4-ம் தேதி வரை மிகவும் கவனமாகச் செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளிடம் கனிவான போக்கைக் கடைப்பிடிப்பதுடன் சக ஊழியர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அக்டோபருக்குப் பிறகு புதுப் பொறுப்புகளும் பெரிய பதவியும் தேடி வரும்.

கலைத்துறையினரைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சீரும் சிறப்புமாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதுடன் புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். பலர் இந்த ஆண்டு வாழ்க்கையைத் தொலைநோக்குடன் நல்ல முறையில் அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

விவசாயிகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மகசூல் அபரிமிதமாக இருக்கும். ஆனாலும், எலித்தொல்லை, பூச்சித்தொல்லை அதிகமாக இருக்கும். அவற்றைக் கட்டுப்படுத்தப் பார்க்கவும். ஏழரைச்சனி நடப்பதால், பக்கத்து வயல்காரர்களிடம் சண்டை, சச்சரவு வைத்துக்கொள்ளவேண்டாம். 
மொத்தத்தில் இந்த விளம்பி வருடம்,  சின்னச்சின்ன சங்கடங்களைச் சமாளிக்க வைத்து, பெரிய வெற்றியைத் தரும் ஆண்டாக அமையும்.
பரிகாரம்
மதுரை, எழுத்தாணிக்கார தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீகனகவல்லி தாயாரையும், ஸ்ரீவீரராகவ பெருமாளையும் ஏகாதசி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; ஆனந்தம் பெருகும்.