திங்கள், 30 ஏப்ரல், 2018

வாஸ்து

vastu-pooja
கட்டடம் கட்டத் தொடங்கும்போது மனைகோலப்படுகிறது. அதை நன்மை தரும் மாதங்களில் செய்ய வேண்டும். அப்போது தான் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்களுக்கு நற்பலன்களாக நடைபெறும்.
மனைகோலும்வதற்கு ஏற்ற மாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்களிலும் மனை கோலலாம். மற்ற நான்கு மாதங்களான ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவற்றில் மனை கோலக்கூடாது.
இவற்றில் ஒவ்வொரு ஜன்ம நட்சத்திரத்திற்கும் ஆகாத சூன்ய மாதங்கள் உள்ளன. அத்தகைய மாதங்களிலும் மனைகோலக்கூடாது. வீடு கட்டுபவர் தம்முடைய ஜன்ம நட்சத்திரம் அல்லது ராசிக்கு ஆகாத சூன்ய மாதத்தைத் தெரிந்து கொண்டு அந்த மாதத்தில் மனை கோலுவதைத் தவிர்க்க வேண்டும்.
கீழே ஒவ்வொரு ஜன்ம நட்சத்திரம் அல்லது ராசிக்கு எந்தெந்த மாதம் சூன்ய மாதமாக விளங்குகிறது என்பது விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நட்சத்திரம் – ராசி – சூன்யமாடம்
அசுவினி – மேஷம் – சித்திரை
பரணி – மேஷம் – சித்திரை
கிருத்திகை முதல் பாதம் – மேஷம் – சித்திரை
கிருத்திகை 2, 3, 4, பாதங்கள் – ரிஷபம் – வைகாசி
ரோகிணி – ரிஷபம் – வைகாசி
மிருகசீரிடம் 1, 2 பாதங்கள் – ரிஷபம் – வைகாசி
மிருகசீரிடம் 3, 4 பாதங்கள் – மிதுனம் – ஆனி
திருவாதிரை – மிதுனம் – ஆனி
புனர்பூசம் 1, 2, 3, பாதங்கள் – மிதுனம் – ஆனி
புனர்பூசம் 4 ஆம் பாதம் -கடகம் – ஆடி
பூசம் – கடகம் – ஆடி
ஆயில்யம் – கடகம் – ஆடி
மகம் – சிம்மம் – ஆவணி
பூரம் – சிம்மம் – ஆவணி
உத்திரம் முதல் பாதம் – சிம்மம் – ஆவணி
உத்திரம் 2, 3, 4, பாதங்கள் – கன்னி – புரட்டாசி
அஸ்தம் – கன்னி – புரட்டாசி
சித்திரை 1, 2 பாதங்கள் – கன்னி – புரட்டாசி
சித்திரை 3, 4, பாதங்கள் – துலாம் – ஐப்பசி
சுவாதி – துலாம் – ஐப்பசி
விசாகம் 4 ம் பாதம் – விருச்சிகம் – கார்த்திகை
அனுஷம் – விருச்சிகம் – கார்த்திகை
கேட்டை – தனுசு – கார்த்திகை
மூலம் – தனுசு – மார்கழி
பூராடம் – தனுசு – மார்கழி
உத்திராடம் முதல் பாதம் – மகரம் – மார்கழி
உத்திராடம் 2, 3, 4, பாதங்கள் – மகரம் – தை
திருவோணம் – மகரம் – தை
அவிட்டம் 1, 2, பாதங்கள் – கும்பம் – தை
சதயம் – கும்பம் – மாசி
பூரட்டாதி 1, 2, 3, பாதங்கள் – கும்பம் – மாசி
பூரட்டாதி 4 ம் பாதம் – மீனம் – பங்குனி
உத்திரட்டாதி – மீனம் – பங்குனி
ரேவதி – மீனம் – பங்குனி
ஒருவர் தன்னுடைய நட்சத்திரம் அல்லது ராசிக்கு எந்த மாதம் சூன்ய மாதமாக இருக்கிறதோ அதில் மனை அல்லது வீடு வாங்கக்கூடாது. கட்டட வேலையை ஆரம்பிக்கக்கூடாது. கிரகப்பிரவசமும் செய்யக்கூடாது.

வாஸ்து

AssetsHelp Main Door
எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். அதே போன்று நாம் அமைக்க இருக்கும் வீட்டிற்குத் தலைவாசல் பிரதானம். தலைவாசல் என்பது அந்த வீட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதாகும்.
1. கிழக்கு திசை பார்த்த வீடு :
கிழக்கு பார்த்த வீட்டிற்கு முன்பாக நின்று வலதுபுறம் முதல் இடப்புறம் வரை (ஈசான்ய முதல் அக்னிவரை) 9 பிரிவுகளாகப் பிரிக்க வேண்டு அதைச் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று முறையே பிரிக்க வேண்டும். இதில் சந்திரன் பகுதியிலும் மற்றும் புதன், குரு, சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.
கிழக்கு தலைவாசல் கொண்ட இல்லத்தில் தலைவாசல் வடகிழக்குத் திசையை நோக்கி இருக்கும்படி கட்டினால் செல்வம் வளரும். தென்கிழக்கு திசை நோக்கி வாசல் அமைத்தால் பல சிக்கல்கள் உண்டாகும். நெருப்பால் அச்சம், கடன், ரோகங்கள் போன்றவை ஏற்படும்.
2. தெற்கு திசை பார்த்த வீடு :
தெற்கில் தெரு இருந்து தெற்கு திசை நோக்கித் தலைவாசல் அமைக்கும்போது, கிழக்கிலிருந்து மேற்காக வீட்டின் சுவரை ஒன்பது பகுதிகளாக்கி, கிழக்கிலிருந்து முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களுக்கும் பங்கிட வேண்டும். சந்திரன் அல்லது புதன், குரு, சுக்கிரன் பகுதியில் தலைவாசல் வைத்துக் கொள்வது நன்மைகள் தரும்.
தெற்குத் திசையில் தலைவாசல் இருக்கும்போது, அதற்கு நேராக வடக்கில் ஒரு வாயில் இருக்க வேண்டும். தெற்கில் மட்டும் ஒரு வாயில் அமைக்கக் கூடாது. மேற்கு வாயில் வைக்கக் கூடாது.
இந்தத் திசையில் வாயில் வைக்கும்போது வாயில் தென்மேற்குத் திசையை நோக்கி வைத்தால் பகைவரால் துன்பம், குலநாசம் அகால மரணம் போன்ற துன்பங்கள் ஏற்படும் தென்கிழக்குத் திசை நோக்கி அமைத்தால், நெருப்பால் அல்லது ஆயுதத்தால் தீங்கு எனப் பல துன்பங்கள் தரும். எனவே, சரியாகத் தெற்கு நோக்கியே அமைக்க வேண்டும்.
தெற்கு நோக்கிய வீட்டில் தெற்குப் பகுதி வீட்டை உயர்த்தி மாடி கட்டி வசித்தால் செல்வம் மிகும். தெற்கு வாசல் வீட்டிற்கு மழைநீர் மற்றும் வீட்டில் உபயோகிக்கும் நீர் முதலியவை வடக்கு நோக்கிச் செல்லும்படி நீரோட்ட வழி அமைக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் காலியிடம் அதிகமிருந்தால் ஆண் சந்ததி உண்டு. வடக்கில் காலி இடம் அதிகமிருந்தால் செல்வச் செழிப்பு உண்டு.
3. மேற்கு திசை பார்த்த வீடு :
வீட்டின் முன்புறம் நின்று, தெற்கு முதல் வடக்காக 9 சம பாகங்களாகப் பிரித்து, முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்று பங்கிட வேண்டும். சந்திரன் பகுதியிலும், குரு, புதன், சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.
மேற்கு நோக்கிய இல்லத்தின் தலைவாசல் சரியாக மேற்கு நோக்கி அமைக்க வேண்டும். தென்மேற்கு நோக்கியோ, வடமேற்கு நோக்கியோ இருக்கக் கூடாது. தீய பலன்கள் கொடுக்கும்.
4. வடக்குத திசை பார்த்த வீடு :
வடக்குத திசை கொண்ட கட்டடங்களில் தலைவாசல் அமைக்குபோது கட்டடத்திற்கு வடபுறம் நின்று மேற்கிலிருந்து கிழக்காக 9 பாகம் செய்ய வேண்டும். முன்பு கூறியது போன்று சந்திரன் பகுதியிலும், குரு, புதன், சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.
சூரியன் முதலாகக் கேது வரையிலான பகுதிகளில் நடைவைத்தால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
  1. சூரியன் – ஆதாயம் குறையும் தாய்க்கும், பிள்ளைக்கும் கருத்து
    வேறுபாடு சண்டை சச்சரவுகள் உண்டு.
  2. சந்திரன் – விருத்தியும், தாழ்ச்சியும் மாறி வரும்.
  3. செவ்வாய் – மனைவிக்கு ஆகாது. எதிரிகள் பயம் உண்டு.
  4. புதன் – லட்சுமி கடாக்ஷம், கல்வியறிவு மிகும்.
  5. குரு – தனதான்ய சம்பத்து, ஆபரணச் சேர்க்கை.
  6. சுக்கிரன் – நீண்ட ஆயுள், சுபபலன்கள், யோகபாக்கியம்
  7. சனி – பொருள் நாசம், வழக்கு, கலகம்.
  8. ராகு, கேது – கட்டடம் அடிக்கடி கைமாறும், தீய பலன்கள்
    கொடுக்கும்.
எனவே, புதன், குரு பகுதியில்தான் வைக்க வேண்டும். மிகுந்த நன்மை பயக்கும். சுக்கிரன் பகுதி தியேட்டர்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு அமைக்கலாம். பெண்கள் ஆதிக்கம் மிகும். மற்றப் பகுதிகளில் கூடாது.

நான்-வெஜ் சாப்பிட்டபின் தவிர்க்க வேண்டும்


நான்-வெஜ் சாப்பிட்டபின் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பொருள்கள்
🌾➊ உயர் கொழுப்பு
உணவுகள்🌾
கொலஸ்ட்ரால் உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகு செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன், கொலஸ்ட்ரால் என்றால் என்ன , இது எப்படி மனித உடலை பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
கொலஸ்ட்ரால் என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் கொழுப்பு அமிலமாகும். உடலின் பல செயல்பாடுகளுக்கு இது மிகவும் அவசியம். சம நிலை மாறும்போது, இந்த கொலஸ்ட்ரால் உடலுக்கு பலவித தீங்கை ஏற்படுத்துகின்றன. கொலஸ்ட்ரால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் ஆயுர்வேதம் இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறது. கொலஸ்ட்ரால் உடலில் உள்ள இரத்த சுற்று சேனல்களை ஆதரிக்கும் மற்றும் உயர்த்தும் ஒரு முக்கிய கூறு என்று ஆயுர்வேதம் கருதுகிறது. இது உடலுக்கு கெட்டது அல்ல, ஆனால் உடலில் அமா இருந்தால் மட்டுமே தீய விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.
🌾➋ இதய நோய்கள்🌾
கொழுப்பு திசுக்களில், நச்சுக்களின் வடிவத்தில் குவிந்து கொண்டிருக்கும் வளர்சிதை மாற்ற மிச்சங்கள் தான் அமா எனப்படுபவையாகும். அஜீரணக் கோளாறால் உண்டாகும் ஒட்டும்தன்மையுள்ள, கெட்ட மனம் வீசும், கழிவுப் பொருள் தாம் அமா என்பது. சரியான முறையில் சுத்தப்படுத்தாமல் நீண்ட நேரம் இருப்பதால் உண்டாவது அமா விஷம். குறிப்பிட்ட அளவைத் தாண்டி இதன் உற்பத்தி அதிகரிக்கும்போது இவை, உடல் திசுக்களில் பரவி, அடைக்கப்படுகிறது. இந்த அமாவிஷம், கொழுப்பு திசுக்களில் அடைக்கப்படும்போது, உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் இதர இதய நோய்கள் போன்றவை ஏற்படும் நிலை உண்டாகும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு செயலாகும். ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாடு, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றை பின்பற்றுவதால் கொலஸ்ட்ராலை எளிதில் குறைக்கலாம். உடலின் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தும் உணவுகளை நீங்கள் உட்கொள்ள நேர்ந்தால், கீழே குறிப்பிட்டுள்ள சில ஆயுர்வேத வழிகாட்டிகளைப் பின்பற்றி உடலின் தீய மாற்றங்களை சரி செய்யலாம்.
🌾➌ சில மணி நேர
உடற்பயிற்சி🌾
எண்ணெய் அதிகம் உள்ள அல்லது கனமான உணவுகளை எடுத்துக் கொண்டால், மிகக் கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். அதிக கலோரிகளை எரிக்க நடைபயிற்சி பயன்படுகிறது.
🌾➍ வெதுவெதுப்பான நீர் பருகவும் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ்🌾
வெதுவெதுப்பான நீரை பருகுவதால் எண்ணெய் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இதனால் உங்கள் கல்லீரல், வயிறு, மற்றும் குடல் பகுதி சேதமடைவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமாக மாறுகிறது.
🌾➎ சாப்பிட்டவுடன் உறங்கச் செல்ல வேண்டாம்🌾
இரவு உணவிற்கும், நீங்கள் உறங்கச் செல்வதற்கும் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இடைவெளி தேவை. சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வதால், உடலில் உள்ள ஆற்றல் பயன்படாமல், கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படுகிறது. எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின் குளிர்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின், குளிர்ந்த உணவுப் பொருட்களாகிய ஐஸ் க்ரீம், குளிர்பானம், குளிர்ந்த நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் கல்லீரல், வயிறு, குடல் போன்றவற்றில் எதிர்மறை விளைவுகள் உண்டாகின்றன. ஆகவே கன உணவிற்கு பின் குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அம்பாளுக்கு சிறப்பு நாட்கள்

அம்பாளுக்கு உகந்த விரத நாட்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள விளம்பி வருடத்தில் வரும் இந்த நாட்களில் அம்பாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய மிக, மிக சிறந்த தினங்களாகும்.

சித்திரை 16 (29.4.2018) ஞாயிறு - அர்த்தநாரீஸ்வர விரதம் (தம்பதிகளுக்குள் அன்யோன்யம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் சேருவர்)
சித்திரை 17 (30.4.2018) திங்கள் - ச ம்பத் கவுரி விரதம் (வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்)

வைகாசி 31 (14.6.2018) வியாழன் - புன்னாக கவுரி விரதம் (வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் தீரும்)
ஆனி 2 (16.6.2018) சனி - ரம்பா திருதியை, கதலி கவுரி விரதம் (பெண்களுக்கு அழகு வசீகரம் கூடும். விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும்)
ஆனி 14 (28.6.2018) வியாழன் - வடசாவித்திரி விரதம் (பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர்)

ஆடி 1 (17.7.2018) செவ்வாய் - சமீ கவுரி விரதம் (தாயும் சேயும் நலமாக இருப்பர்)
ஆடி 11 (27.7.2018) வெள்ளி - கோகிலா விரதம் (குரல் வளமை ஏற்பட்டுப் பெயரும் புகழும் கிடைக்கும்)
ஆடி 28 (13.8.2018) - ஸ்வர்ண கவுரி விரதம் (தங்கம் வாங்கும் யோகம் ஏற்படும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்)
ஆடி 30 (15.8.2018) புதன் - பணி கவுரி விரதம் (நோய் நொடிகள் தீரும். தனக்கும் கணவனுக்கும் தொழில் விருத்தி ஏற்படும்)

ஆவணி 1 (17.8.2018) வெள்ளி - சீதளா விரதம் (உடற்பிணிகள் தீரும். ஆரோக்கியம் ஆயுள் பெருகும்)
ஆவணி 27 (12.9.2018) புதன் - ஹரிதாளிகா கவுரி விரதம் (நோய்கள் தீரும். ஆரோக்கியம் ஏற்படும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர். உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும்).
புரட்டாசி 2 (18.9.2018) செவ்வாய் - அதுக்க நவமி விரதம் (துக்கங்கள் விலகும்).

புரட்டாசி 8 (24.9.2018) திங்கள் - உமா மகேஸ்வர விரதம் (பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பர்)
ஐப்பசி 10 (27.10.2018) சனி - சந்திரோதய கவுரி விரதம் (திருமணத் தடைகள் நீங்கும். ஆயுள் பெருகும். மன அமைதி ஏற்படும்)
ஐப்பசி 21 (7.11.2018) புதன் - கேதார கவுரி விரதம் (லட்சுமி கடாட்சம் பெருகும். பெண்கள், ஆண்கள் நோயின்றி வாழ்வர்)

கார்த்திகை 23 (9.12.2018) ஞாயிறு - திந்த்ரிணீ கவுரி விரதம் (சனி தோஷம், நவக்கிரக தோஷம் விலகும்)
கார்த்திகை 24 (10.12.2018) திங்கள் - அபியோக திருதியை (தொழில் துறை வளர்ச்சி, திடீர் தனலாபம் ஏற்படும்)
பங்குனி 1 (15.3.2019) வெள்ளி - சம்பத் கவுரி விரதம் (சகல விதத்திலும் செல்வாக்குடன் பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்)
பங்குனி 25 (8.4.2019) திங்கள் - சவுபாக்கிய கவுரி விரதம் (சகல சவுபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்வர்)

இந்நாட்களில் வீட்டில் கலசம் வைத்து அம்பாளை வழிபட மேற்கூறிய சுபங்கள் யாவும் நிகழும். குறைந்தபட்சம் அன்றைய தினம் வீட்டில் அம்பாள் படத்திற்கும் கோவிலுக்கும் சென்று அம்பாளுக்கு விளக்கு வைத்து வர வேண்டும்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

நரசிம்ம ஜெயந்தி



இன்று நரசிம்ம ஜெயந்தி : நரசிம்மர் வழிபாடு நினைத்ததை நிறைவேற்றும் !
நரசிம்ம ஜெயந்தி...!!
👉 திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் சிறப்பு வாய்ந்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். திருமாலின் அவதாரங்களில் இது நான்காவது அவதாரமாகும். தன் பக்தனின் சொல்லைக் காப்பாற்றவே, விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார்.

நரசிம்ம அவதாரம் :

👉 அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனை துன்புறுத்தி வந்தான்.

👉 இரண்யன், அடேய் பிரகலாதா! எங்கேயடா இருக்கிறான் உன் விஷ்ணு? என்று கேட்கிறான்.


👉 தந்தையே! அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான். எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கின்றான் எனச் சொல்ல இந்த தூணில் இருக்கிறானா, என இரண்யன் தூணை உடைக்க நிகழ்ந்ததே நரசிம்ம அவதாரமாகும்.

👉 பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

நரசிம்ம ஜெயந்தி :

👉 இன்று (28.04.2018) நரசிம்ம ஜெயந்தி அனைத்து நரசிம்மர் கோவில்களிலும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நரசிம்ம ஜெயந்தி வழிபாடு :

👉 நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும்.

👉 வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி அன்று விரதமிருந்து நரசிம்மரை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம்.


👉 நரசிம்மருக்கு சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரை பொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம்.

👉 விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்வது சிறப்பு.

நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டின் பலன்கள் :

👉 பாவங்களில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

👉 'ஓம் நமோ நாராயணாய" எனக் கூறி வழிபட்டால் நாம் செய்த பாவங்களில் இருந்து மோட்சம் அளிப்பார்.

👉 நரசிம்மரை வழிபட்டால் கடன் சுமை குறையும், திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.





புதன், 25 ஏப்ரல், 2018

மூட்டு வலிக்கான காரணங்கள்

வாதம் - மூட்டு வலிக்கான காரணங்கள்

மனிதனுக்கு மிகுந்த வலியும், வேதனையும் தருவது இந்த வாத நோய், வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் வாத நோயால் பாதிக்கப்பட நேர்கிறது.

பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாக, மனிதன் தன் உடல் உறுப்புக்களை இயக்கக் கற்றுக் கொண்டான். படைப்பின் கொடையாகிய இந்த உயர்ந்த இயக்கத்தை, போதிய அளவில் இல்லாமல், குறைவாகவோ, அதிகமாகவோ பயன்படுத்தினால் வரும் பாதிப்புகளைப் பின்னரே அறிய நேர்ந்தது.

தனது அன்றாட வாழ்வின் செயல்பாடுகளைக் கூட “கணினி” மூலம் இயக்கும் அளவு அறிவுத்திறன் மிக்க, மிக உயர்ந்த படைப்பான மனித குலத்துக்கு, அந்தக் கணினியைவிட மிக மிக நுணுக்கமான மெக்கானிசம் கொண்ட முதுகுத்தண்டு மற்றும் பிற உறுப்புக்களை இயற்கை வழங்கி இருக்கிறது. உடல் உறுப்புக்களில் நிகழும் மெல்லிய அசைவுகளால் பலவிதமான நிகழ்வுகள் நடக்கின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள், மூட்டுகளில் ஏற்படும் தடையில்லாத அசைவுகளால் உடல் இயக்கம் நடக்கிறது.

ஆனால் உடலின் மூட்டுகளின் வடிவமைப்பிலோ, செயல்பாடுகளிலோ மாறுதல் நடக்கும் போது, நமது செயல்பாடுகள் ஸ்தம்பிக்கின்றன. மூட்டுக்கள் மற்றும் அவற்றுக்கிடையே இருக்கும் மெல்லிய திசுக்களின் பாதிப்பால், நாம் முடமாகி, பிறரைச் சார்ந்து வாழும் நிலை ஏற்படுகிறது.

மனிதனுக்கு மிகுந்த வலியும், வேதனையும் தருவது இந்த வாத நோய், வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் வாத நோயால் பாதிக்கப்பட நேர்கிறது. சிலர் இந்நோயை, நோய் என்றுகூட அறியாமல் வாழ்வின் ஒரு கட்டமாக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். சிலருடைய வாழ்வில் இந்நோய் அறியப்பட முடியாமல் போகிறது. பலருக்கு இதைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லாமல், நோய் தீவிரமடைந்து போகிறது.

‘ஆர்த்தரைட்டிஸ்’ என்றால் என்ன?

இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஆர்த்ரோ என்றால் மூட்டு என்று பொருள். ட்டிஸ் என்றால் நீர்மகார்த்தல் என்று பொருள். ஆர்த்தரைட்டிஸ் என்பது மூட்டுக்கள் சம்பந்தமான ஒரு நோய். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்களில் நீர்கோர்ப்பதால் வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறிந்திருக்கின்றனர். அவற்றில் அதிகம் காணப்படுபவை:

ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் - மூட்டு தேய்மானம்.

ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்- சரவாங்கி.
சொரியாடிக் ஆர்த்தரைடிஸ்-தோல் நோயுடன் சேர்ந்த முடக்குவாதம்.
கவுட்-யூரிக் அமிலம் போன்றவற்றால் படிகங்கள் உருவாகி, அதனால் வலி வரல்.
செப்டிக் ஆர்த்தரைட்டிஸ்-அடிபடுவதால் வருவது.
மூட்டுவலி மற்றும் ஆர்த்தரைட்டிஸ்

நோய்க்கான காரணங்கள்

* மூட்டுக்களில் நீர்கோர்த்தல் (ருமாட்டாய்டு போல).
* மூட்டுகள் சிதைந்து போதல் (விபத்து, வேலைப்பளு காரணமாக).
* தேய்ந்து போதல் (வயது காரணமாக).
* படிகங்கள் உருவாதல் (கவுட் போல).
* உடல் சோர்ந்து போதல்.

* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அல்லது ஆட்டோ இம்யூன் காரணமாக (உடலில் பாதுகாப்பு இயக்கமான நோய் எதிர்ப்பு சக்தியே உடலுக்கு எதிராகச் செயல்படுவது).
* நோய்த் தொற்று - (செப்டிக் ஆர்த்தரைட்டிஸ் போல).
* கொலோஜன் வாஸ்குலர் டிஸ்ஆர்டர் (“லுப்ஸ் எருத்மேட்டிஸ்” போல).

வாத நோய்க்கான அறிகுறிகள்:

* மூட்டுக்களில் வலி.
* மூட்டுக்களில் வீக்கம்.
* மூட்டுக்களில் இறுக்கம்.
* மூட்டுக்களைச் சுற்றிலும் வலி.
* லூப்பஸ் மற்றும் டுமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ், பிறஉறுப்புகளையும் பாதிக்கும். அதனால் நடக்க முடியாமல் போதல்.
* பொருட்களைக் கையால் பிடிக்க முடியாமை.

* உடல்வலி, சோர்வு.
* எடை குறைதல்.
* தூக்கமின்மை.
* தசைகளில் வலி.
* மூட்டுகள் மென்மையாகிப் போதல் (தொட்டாலே வலிக்கும்).


* மூட்டுக்களை மடக்குவதில், அசைப்பதில் சிரமம். ஆர்த்தரைட்டிஸ் நோய் மிகத்தீவிரமடையும் போது, உடலின் எல்லா இயக்கங்களும் குறைந்து, உடல் எடை கூடுதல், கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாதல், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாதல், பிற உடலுறுப்புக்கள் சேதமாதல் ஆகியன நேரலாம்.

ஆர்த்தரைட்டிஸ் பற்றிய ஆயுர்வேதத்தின் கொள்கை

எந்த நோயும், அது உருவாகவும், தீவிரமடையவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தோஷங்கள் அதிகமாவதும் அல்லது ஓரிடத்திலேயே தேங்கி, விடுவதுமே காரணம் என்பது ஆயுர்வேத கூற்று. நிலைப்பாடு மாறிய தோஷம், தோஷங்கள் வலுக்குறைந்த இடங்களில் (தாதுக்களில்), குறிப்பாக, எலும்புகள், மூட்டுக்கள், தசைகள், எலும்புகளின் மேலுள்ள கவசம் போன்ற உறைகள், எலும்பிலிருந்து தசைகள் ஆரம்பிக்கும் டென்டன் என்ற பகுதிகள் ஆகியற்றில் தங்கி விடும். அதனால் ஆர்த்தரைட்டிஸ் உண்டாகும்.

தோஷங்களின் பங்கு

மூட்டுக்களின், இயல்பான, தடையில்லா அசைவுகளில் மூன்று தோஷங்களுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. மூன்றும் சமநிலை தவறாது இருக்கும் போது, இயல்பு நிலை சாத்தியமாகிறது.

கப தோஷம்

மூட்டுக்கள் கப தோஷத்தை சார்ந்தவை. மூட்டுக்களின் கிடையே உராயிவைத் தடுக்கும், மூட்டுக்களின் உறுதிப்பாடு, நிலைப்பாடு ஆகியவற்றுக்குக் காரணமாகிறது-. மூட்டுக்களுக்கு போஷாக்கைத் தருகிறது. கப தோஷம் குறையும் போது, மூட்டுக்களின் ஸ்திரத்தன்மை குறைகிறது. எண்ணெய்ப்பசை குறையும் போது, வறட்சி உண்டாகிறது. அதன் காரணமாக நோய்த்தொற்று வரலாம்.

கப தோஷம் அதிகமாகும் போது, நீர் தேங்கி வீக்கம் வரும். கப தோஷம் மாறுபாட்டால் ஆர்த்தரைட்டிஸ் வரும் போது தோன்றும் அறிகுறிகள்

* அதிக எடை கூடி இருப்பதாக உணரல்.
* இறுக்கம், சூடு குறைந்திருத்தல்.
* ஈரப்பசை அதிகமாக இருப்பதாகத் தோன்றல்.
* உடல் அசைவுகள் குறைதல்.
* அதிகாலையில் வலி அதிகரித்தல்.
* குளிர்காலம்.
* மேகமூட்டமான சமயங்கள்.

* இளவேனில் காலங்களில் வலி அதிகரித்தல்.
* மன அழுத்தம் காரணமாக.
* தனக்குள்ளேயே முடங்கிப் போவதனாலும் வலி அதிகமாதல்.
* வேலை மற்றும் இயக்கம் குறைவதால் வலி அதிகமாதல்.
* உணவு எடுத்துக் கொண்டபின் வலி அதிகமாதல்.
* புளிப்பு, இனிப்பு, உப்புச்சுவைகள் வலியை அதிகரிக்கும்.
* குளிர்ச்சியான, அதிகம் எண்ணெய்ப் பொருட்கள், பழைய உணவுகள் வலியை அதிகமாக்கும்.

வாத தோஷத்தால் ஆர்த்தரைட்டிஸ் வரும் போது காணப்படும் அறிகுறிகள்:

வாத தோஷம் இயல்பான இயக்கத்துக்கு உதவும் வாத தோஷம் மூட்டுக்களின் இலகுவான இயக்கத்தைக் காக்கும் சரியான எண்ணெய்ப்பசைத் தன்மை இருந்தால் தான் வாதம் இவற்றைச் செய்ய முடியும்.

* கபமும்
* வாதமும் சமநிலையில் இருந்தால் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்ளும் மாறாக கப தோஷம் அதிகமாகும் போது.
* வாதம் இயங்குவதற்கான இடம் குறுகி விடுகிறது-. ஏனெனில் கபம் அதிகமாகும் போது திரவங்கள் அதிகரித்து விடுகிறது.
* அதற்கு மாறாக
* வாதம் அதிகமாகும் போது
* கபத்தைக் குறைக்கும், அதனால் மூட்டுக்களின் வடிவமைப்பு மாறும்.

அறிகுறிகள்

வாதம் நிலை மாறும் போது:

* கடுமையான வலி.
* வீக்கம், (பையில் காற்று அடைத்தது போல) அசையும் போது சப்தம்.
* அசைவின் போது வலி, காலையிலும்.
* இரவிலும் வலி அதிகமாகும்.
* மழை, குளிர்.
* மேகமூட்டம் மிகுந்த நாட்களில் வலி அதிகமாகும்.
* வெயில் காலத்தில் வலி குறையும்.
* பசி, தூக்கம், சிறுநீர் கழித்தல் ஆகிய இச்சைகளைக் கட்டுப் படுத்துவதாலும்.
* செயற்கையாக உந்துவதாலும் வலி அதிகமாகும்.
* அதிக கோபம்
* பயம்.
* மன அழுத்தம் காரணமாக வலி அதிகமாகும்.
* சூடான, கசப்பான சுவையுள்ள உணவுகள்.
* குளிர்ச்சியான உணவுகள்.
* பொரித்த உணவுகள், பழைய உணவுகள் இவற்றால் வலி அதிகமாகும்.
* அதிகப்படியான உடற்பயிற்சி வலியை அதிகமாக்கும்.
* வெது வெதுப்பான சூழல்.
* சூடான கால நிலை வலியைக் குறைக்கும்.

பித்ததோஷம்

மூட்டுக்களில் வளர்ச்சிதை மாற்றம் நடைபெறக் காரணமாகும், மூட்டுக்களில் வெதுவெதுப்பான சூழலைத்தரும்.
- நோய் தொற்று வராமல் தடுக்கும்.
- கிருமிகளை அழிக்கும்
- கபத்துடன் சேர்ந்து மூட்டுக்களில் லூப்ரிக்கேசனைக்காக்கும்.
- அதிக உஷ்ணதன்மை காரணமாக குளிர்ந்த தன்மையுடைய 2 பொருட்களையும் அதாவது வாதம், கபம், இரண்டையும் சமநிலைப்படுத்தும்.
- நீர் கோர்ப்பதால் வலி அதிகமாகும்.

அறிகுறிகள்

பித்தம் அதிகமாகும்போது, மூட்டுகளில் வலி
- வலி மிகுந்து எரிவது போன்றிருக்கும். வெதுவெதுப்புத்தன்மை இருக்கும்.
- கடுமையாக நீர் கோர்த்து வீங்கும்.
- வெந்து காணப்படும்
- இயக்கமே குறையும்
- மதிய வேளைகளில் வலி அதிகரித்து மாலையில் குறையும்
- வெயில் காலம், இலையுதிர் காலத்தில் வலி அதிகமாகும்
- குளிரில் வலி குறையும்.
- கோபம், பொறாமை, வெறுப்பு, ஆகிய, குணங்கள், வலியை அதிகரிக்கும்.
- புளிப்பு, உப்புச்சுவை, பொருட்கள், சூடான பொருட்கள், பொரித்த மசாலா உணவுகள் வலியை அதிகரிக்கும்.

வெயில் நெருப்பு அதிக உஷ்ணம் ஆகியவற்றுக்கு அருகே நீண்ட நேரம் இருந்தால் வலி அதிகரிக்கும்.

- குளிர் வலியைக் குறைக்கும்.

 இதைப்போலவே இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தோஷங்களில் மாறுபாடு நேர்ந்து ஆர்த்தரைட்டிஸ் வரும் போது எந்த தோஷம், அதிகம் பாதிக்கப்படுகிறதோ அதற்கான அறிகுறிகள் மிகுந்திருக்கும்.

சரிவர செரிமானம் ஆகாத பொருட்கள் கடைசிவரை செரிக்கப்படாத போதும் செல்களால் போஷாக்காக உறிஞ்சப்படாத போதும் அந்த நிலை ஆமம் எனப்படுகிறது. இது சரியான செரிமானம் இல்லாத காரணத்தால் உருவாகிறது.

சரியான செரிமானம் ஆகாத நிலையில் தன் பாதுகாப்புத்தன்மையால் பாதைகளை அடைக்கிறது. திசுக்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தை தடுக்கிறது. திசுக்கள் உண்டாவதை தடுக்கிறது.

மெதுவாக இந்த ஆமம் தோஷங்களுடன் சேர்ந்து சாமதோஷம் என்ற நிலையை அடைகிறது. சாம வாதம், சாமபித்தம், சாமகபம் என்ற இம்மூன்று நிலைகளும் வேறுவேறு விதமான ஆர்த்தரைட்டிஸ் உருவாக காரணமாகின்றன.
பலம் குறைந்த தாதுக்கள்
தாதுக்கள் பலம் குறையும் போது தோஷங்கள் நிலைமாறும் சூழ்நிலை உருவாகி ஆர்த்தரைட்டிஸ் வர ஏதுவாகிறது. பொதுவாக எலும்புகள் தசைகள் கொழுப்புத்திசுக்கள் ஆகிய ன தோஷங்களின் நிலைப்பாடு மாறுவதால் பாதிக்கப்பட்டு ஆர்த்தரைட்டிஸ் உண்டாகிறது.

நமது உடலின் நோய் எதிர்ப்புத்திறனே நேர் எதிராக மாறி ஆட்டோ இமயூன்நோய்களாகின்றன (வெளிக்காரணங்கள் இல்லாமல்) என்ற, இன்றைய, நவீன மருத்துவக்கூற்று இந்நிலைக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.

மனம்

அடுத்த முக்கியமான காரணி மனம், உடல், இரண்டும் ஒருங்கிணைந்ததே மனித வாழ்வு நோயாளிகள் பல விதமான கவலைகள், துயரம், மனஉளைச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் போது செரிமானம் தடைப்படும். ஆமம் உண்டாகும் தூக்கமின்மை வரும், அதனால் வாதம் அதிகம் ஆகும். கோபத்தால் பித்தம் அதிகம் ஆகும் அல்சர் போன்றவை வரும். துயரம் தொடரும் போது பித்தம் அதிகமாகும், மூட்டுக்களைப் பாதிக்கும்.

ஆகவே சிகிச்சை முறை உடலைக் குணப்படுத்துவது மட்டுமில்லாமல் மனதைச் சரிசெய்வதிலிருந்து தொடங்கவேண்டும்

ஆண்டாள் பெருமை

ஆண்டாள் பெருமை

1 ) பன்னிரண்டு ஆழவர்களில் இவள் ஒருத்தி மட்டுமே பெண்ணாவாள்.
2 ) இவள் பூமாதேவியின் அவதாரம்.
3 ) ஜனகருக்கு சீதாதேவியை மகளாக அருளியது போல, பெரியாழவருக்கும் மகளாக இவள் அருளப்பட்டாள்.
4 ) முக்தி தரும் வேதங்களை எளிய தமிழில் வடித்தாள்.
5 ) கண்ணனைத் தவிர வேறு எந்த மானிடரையும் மணம் முடியேன் என்று வைராக்கியத்துடன் இருந்தவள்.
6 ) கண்ணனைத் தன் அன்பால் கட்டியவள்
7 ) மற்ற ஆழ்வார்கள் எழுதிய பாசுரங்களை விட இவளால் பாடப்பட்ட திருப்பாவையை அதிக பக்தர்கள் இன்றும் மனப்பாடமாக ஓதுகின்றனர்.
8 ) மார்கழி என்றாலே அது ஆண்டாளுக்கு உரிய மாதமாகும். மற்ற மாதங்களில் செய்யாவிட்டாலும் மார்கழி மாதம் பலர் திருப்பாவையை ஓதி அவளது அருளை பெறுகின்றனர்.
9 ) இன்றும் ஸ்ரீவல்லிய்ப்புத்தூரில் ஆண்டாளுக்கு சூடிய மாலையைத் தான் பெருமாளுக்கு சூட்டுகிறார்கள்.
10 ) கண்ணன் மீது எவ்வாறு பக்தி செலுத்துவது என்பதை மானிடர்களுக்கு சொல்லிக்காட்டவே அவதரித்தவள்.
11 ) கண்ணன் மீது காதல் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவதரித்தவள்.
12 ) திருப்பாவை என்ற எளிய இலக்கியத்தின் மூலம் நாம் அனைவரும் வீடு பேறு அடைய வேண்டும் என்று அவதரித்தவள்.
13 ) கிட்டத்தட்ட எல்லா முக்கிய விஷ்ணு ஆலயங்களிலும் ஆண்டாளுக்கு தனி சன்னதி உண்டு. ஆராதனைகளும் உண்டு.
14 ) ஸ்ரீ ராமானுஜரை தனது அண்ணனாக எற்றுக்கொண்டாள்.

அவளது பெருமைகளை சொல்லி முடிக்க எனக்கு காலம் போதாது. எனது அறிவும் போதாது.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் அவளது காலடி தூசியை என் தலையில் சுமப்பதை விட வேறு எதுவும் தேவை இல்லை.

அவளது காலடி தூசிக்கு கோடானுகோடி மரியாதைகளையும் வணக்கங்களையும் செலுத்தி எனது பாவங்களை நான் கழிக்க விரும்புகிறேன்.

அவளது நாமத்தையும் அவள் அருளிய திருப்பாவையையும் துணையாக கொண்டு அவளது அடிமையாகவே எப்போதும் இருக்கும் நிலை வேண்டும்.

திங்கள், 23 ஏப்ரல், 2018

சத்தமாக பேசுவது ஏன்


சண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்?
________
ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரை லஸ்யேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்?
ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?
சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....
பின்னர்.. சீடர்களில் ஒருவர் கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!
துறவி ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்! நீ சொல்ல வேண்டியதை அவர் களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துரைக்கலாமே!
ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்...... ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!
கடைசியாக துறவி பதில் கூறுகிறார்.....
எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!
மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்! அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!
ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை!
அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்து வார்கள்! காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!
துறவி தொடர்ந்து கூறுகிறார்.....
இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது!
அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!
துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்........
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப் படுத்தாதீர்கள்.
அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்....
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். 👍🏻👍🏻👍🏻

சனி, 21 ஏப்ரல், 2018

சனி பகவான் மகிமை

சனி பகவான் மகிமை
நன்மை தரும் சனி பார்வை!!

1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.

2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு.  அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.

3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.

4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார்.  அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.

5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.

6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை  பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.

7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள்.  அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி.  அதாவது சத்தியம் தவறாதவரை.

8.  ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.

9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை  சனி நெருங்குவதே இல்லை.

10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.

11. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை. 

தீமை தரும் சனி பார்வை

1. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம்.  உடனே பற்றிக் கொள்வார்.

2. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது  பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.

3.  முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும்.  எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.

4. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.

5. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடித்தமானவர்கள்.  தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.

6. பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனிக்கு பிடிக்கும்.

7. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள்.   ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும். 

8. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.

9. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில்¢ ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.

10. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.

11. தாயிக்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.

12. அடுத்தவர் செறுப்பை அபகரித்து செல்பவர்களை பார்த்தால் சனிக்கு கொள்ளைப்பிரியம். உடனே அவர்களோடு சென்று விடுவார்.

13.  அறுந்த செறுப்பை தைத்துப் போடுபவர்களை பார்த்தாலும், கூடவே இருந்து தொல்லைப்படுத்துவார்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

ருத்ரணி என்ற பெயர் எப்படி வந்தது?


பஞ்சபாத்திரம் :
****************
ருத்ரணி என்ற பெயர் எப்படி வந்தது?
***************************************
பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள்.
நீங்கள் நினைப்பது போல் ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ அல்ல. அதேபோல அதனுடன் இணையாக இருக்கும் சின்னஞ்சிறு கரண்டிக்கு ருத்ரணி என்று பெயர். ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். பாற்கடலை பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்துதானே அமிர்தத்தை எடுத்தார்கள்!
அதுபோல பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும்போது அது அமிர்தமாக வேண்டும் என்பதால் பாம்பின் உருவில் அதனை வடிவமைத்தார்கள். பஞ்சபாத்திரம்-ருத்ரணி என்பதே சரி. இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும்போது, முதலில் அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள்.
உதாரணத்திற்கு
பிள்ளையார் பூஜை செய்யும்போது
'விநாயகாய நமஹ : த்யாயாமி’
(விநாயகப்பெருமானே உம்மை தியானிக்கிறேன்), ‘ஆவாஹயாமி’ (ஆவாஹனம் செய்கிறேன்), ‘ஆஸனம் சமர்ப்பயாமி’ (உட்காருவதற்கு ஆசனம் அளிக்கிறேன்) என்று சொல்லி அழைப்பார்கள்.
விநாயகப் பெருமான் வந்து ஆசனத்தில் அமர்ந்துவிட்டதாக எண்ணி அடுத்து, பஞ்ச உபசாரம் என்ற பூஜைகளைச் செய்வார்கள்.
அதாவது ஒரு விருந்தினர் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களை ‘வாருங்கள், வாருங்கள்’ என்று வரவேற்று, ‘உட்காருங்கள், தண்ணீர் குடியுங்கள்,’ என்று முதலில் உபசாரம் செய்வோம் அல்லவா, அதே போல இறைவன் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவருக்கு பாதபூஜை செய்யும் விதமாக
'பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி’ (உம்முடைய பாதத்தில் தீர்த்தம் விட்டு அலம்புகிறேன்),
‘ஹஸ்தயோ :
அர்க்யம் சமர்ப்பயாமி’
(கைகளை அலம்பிக்கொள்ள தீர்த்தம் விடுகிறேன்),
‘முகே ஆசமனீயம் சமர்ப்பயாமி’
(முகம் வாய் அலம்ப தீர்த்தம் தருகிறேன்), ‘சுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி’
(நீராட சுத்தமான தண்ணீரை விடுகிறேன்),
‘ஸ்நான அனந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி’
(இறுதியாக மீண்டும் ஜலம் விடுகிறேன்) என்று ஐந்து முறை ருத்ரணியினால் தீர்த்தம் விடுவார்கள்.
இந்த ஐந்து விதமான பஞ்ச உபசாரத்தினைச் செய்வதற்கு துணையாக இந்த பாத்திரம் பயன்படுவதால் ஐந்து என்ற அர்த்தத்தோடு இதனை பஞ்சபாத்திரம் என்று அழைப்பதாகவும் கொள்ளலாம்.

புதன், 18 ஏப்ரல், 2018

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்களும், ஊர்களும். . .

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்களும், ஊர்களும். .
.
* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
.
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
.
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
.
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
.
* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.
.
மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.
.
மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.
.
மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.
.
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,
.
புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
.
* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)
.
* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
.
* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
.
பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
.
* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.
.
உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;
.
* உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
.
* உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.
.
* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.
.
* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.
.
சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
.
* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
.
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை
.
விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
.
* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
.
* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்.
.
* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
.
* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.
.
* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
.
* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
.
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
.
* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
.
* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.
.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
.
* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

நன்றி.
              சர்வம்சிவார்ப்பணம்

திதி சூன்ய தோசம்

திதி சூன்ய தோசம் - ஒரு ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால், ‘ஆஹா...யோக ஜாதகம், யோகதசை”  என்று சொல்பவர்கள் அந்த ஜாதகர், திதி சூன்யத்தில் பிறந்திருந்தால், யோக பலனைக் கெடுத்துவிடும் என்பதை ஆராய்ந்து பார்க்காமல் சொல்லிவிடுவார்கள்.

பொதுவாக சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் (வளர்பிறை,தேய்பிறை)என்பது அனைவரும் அறிந்ததே. ஜாதகம் எழுதுபவர்கள் நோட்டில் பட்சம் எழுத மறந்துவிடுவார்கள். சூரியன் - சந்திரன் இருவரும் அமாவாசை திதியில் இணைந்தும், பௌர்ணமி திதியில் எதிர் எதிரிலும் இருப்பது வழக்கம்.

சூரியனிலிருந்து 7ற்குள் சந்திரன் இருந்தால் சுக்ல பட்சம் ஆகும். 7ற்கு மேல் இருந்தால் கிருஷ்ண பட்சம் ஆகும். சுக்ல பட்சம் 14திதிகள், கிருஷ்ண பட்சம் 14 திதிகள்.. அமாவாசை பௌர்ணமி ஆகக் கூடுதல் 30 திதிகள்..

 ஜனனமாகும் குழந்தை, அமாவாசை அல்லது பௌர்ணமி யன்று பிறந்தால், அந்த ஜாதகம் திதி சூன்யம் அடையாத ஜாதகம் ஆகிவிடுகிறது. பிரதமை முதல் சதுர்த்தசி வரை உள்ள 14 திதிகளில் எந்த திதியில் ஜனித்தாலும், இரண்டு ராசி வீடுகளுக்கு திதி சூன்யம்
ஏற்பட்டு விடுகிறது. இதனால் அந்த ராசி அதிபதி திதி சூன்யம்  அடைகிறது. திதி சூன்யம் ஏற்பட்ட ராசி இல்லத்து அதிபதிகள் தங்களது சக்தியை இழக்கிறார்கள்.
    
     மறைவு ஸ்தானமாகிய 3,6-8-12ல் திதி சூன்யம் அடைந்த கிரஹங்கள் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வக்ரம் ஆனாலும் நல்ல பலன் கொடுக்கும்.

     திதி சூன்யம் அடைந்த கிரஹங்கள், பகையானாலும்: நீச்சம் பெற்றாலும், பாபிகளுடன் இருந்ததாலும், இயல்பான பலன்கள் அதாவது காரகப் பலன்கள் அதிகமாகவே கொடுக்கும். திதி சூன்யம் பெற்ற கிரஹங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது உடன் இருந்தாலும் தோசம் இல்லை.

 கிரஹம், அஸ்தங்கதம் அடைந்தாலும், வக்ரமாக இருந்தாலும்; பகை, நீச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திலிருந்து 3,6,8,12 இருந்தாலும் மேசம், விருச்சிகம், சிம்மம், கும்பம், ஆகிய
ராசி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.

     பாபருடன் கூடி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.

     எனவே திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.     

 எந்தெந்த திதிக்கு, சூன்ய தோஷ ராசிகள், கிரகங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

பிரதமை திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் சனி, சுக்கிரன், 

துவிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் -குரு. 

திரிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி- மகரம், சிம்மம், கிரகம்-சனி, சூரியன், 

சதுர்த்தி திதியில் சூன்யம் பெறும் ராசி- கும்பம், ரிஷபம், கிரகம் - சனி, சுக்கிரன். 

பஞ்சமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன், 

சஷ்டி திதியில் சூன்யம் பெறும் ராசி- மேஷம், சிம்மம் , கிரகம் -செவ்வாய், சூரியன், 

சப்தமி திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, கடகம், கிரகம் - குரு, சந்திரன். அஷ்டமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன், 

நவமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய், 

தசமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்.

ஏகாதசி திதியில், சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் - குரு, 

துவாதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் - சனி, சுக்கிரன், 

திரயோதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - ரிஷபம், சிம்மம், கிரகம் - சுக்கிரன், சூரியன், 

சதுர்த்தசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்.

அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு எவ்வித திதி சூன்யமும் இல்லை. தோஷமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பரிகாரம் என்ன? 

பெளர்ணமி தோறும் திரிபுர சுந்தரி வழிபாடு செய்யலாம்..அருகில் இருக்கும் அம்பாள் சன்னதியில் பொங்கல் வைத்து 16 விதமான அபிசேகங்கள் செய்வித்து சுமங்கலிபெண்கள் 16 பேருக்கு மங்கலப்பொருட்கள் தானமாக கொடுக்க வேண்டும்.

பஞ்சமி

🌹 பஞ்சமி திதியில் சொல்ல வேண்டிய மந்திரம்🌹

அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. ’பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள். பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும். தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.
இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது
’ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.
இப்படிச் செய்தால் அம்பிகையின் அருளால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.🌹

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அக்ஷய_திரிதியை

அக்ஷய_திரிதியை

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள்.

அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, "தாயே பசி என்றார் ..

அதை செவிக்கொண்டு அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாறினார்

சிவ யோகியோ, இன்னும் இன்னும் என்று அனைத்தையும் உட்கொண்டே இருந்தார்.

வஸ்துக்கள் அனைத்தும் பூர்த்தியாக, அன்னபூரணி தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை.

உடனே, காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற, தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்தித்து அழைத்தார்.

மஹா விஷ்ணுவாகிய பிந்து மாதவன், ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார்.

அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றால், அங்கு  அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது.

அன்னபூரணி தேவி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை, அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டு அவர்தம் தன் திருவாயால் உட்கொண்டார்.

உடனடியாக, சங்கல்ப மாத்திரத்தால் (பகவத் அனுக்ரகஹத்தால்) அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின.

அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மஹா விஷ்ணுவை அமர்த்தினார்.

மஹா விஷ்ணுவோ, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார்.

தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டா யத்தினால், சிவ யோகியும் தமக்கு திருப்தி என்று எழுந்து விட்டார்.

அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவ யோகி சிவனாகவே காட்சியளித்தார்.

"உமைக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே தாம் இங்கு வந்தோம்", என கூறினார்.

உடனே, மஹா விஷ்ணு,"இன்றைய தினம் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்", என்று ஆசிர்வதித்தார்.

அன்று முதல் சித்தரை மாதம், சுக்ல பக்ஷ திரிதியை நாம் அக்ஷய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்....

எனவே அன்றைய தினம் பொருட்கள் மேலும் சேர பொருட்கள் வாங்குங்கள் ..

ஆனால் புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யுங்கள் ....

மஹா விஷ்ணுவின் அருள் கிடைக்க பெருவீர்..

பேசும் தெய்வம்

பேசும் தெய்வம்
-----------------------

வேதத்தில் கரை கண்ட பக்தர் ஒருவருக்கு கிருஷ்ணனே தலையசைத்து ஒப்புதல் அளித்திருக்கிறார் என்றால், கேட்கவா வேண்டும்....

அவர் தான் கேரளாவிலுள்ள 'திருநாவை' எனும் புண்ணிய தலத்தில் வாழ்ந்த வில்வமங்களசுவாமி, அதிகாலையில் எழுந்து அங்கு ஓடும் இளா நதியில் நீராடுவார். அதன் பின் அங்கு அபூர்வ நிகழ்வு ஒன்று அரங்கேறும்.

ஆற்றங்கரையில் கிருஷ்ணர் சிலைக்கு அலங்காரம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்வார். அப்போது அவர் பாடும் பாடலுக்கு, சிலை வடிவிலுள்ள கிருஷ்ணர் தலையசைத்து ஒப்புதல் தெரிவிப்பார். தலையசைக்கா விட்டால், அந்த பாடலைகளை வில்வமங்கள சுவாமி கணக்கில் சேர்க்க மாட்டார்.
இப்படி கிருஷ்ணரிடம் ஒப்புதல் பெற்ற பாடல்களின் தொகுப்பே புகழ் மிக்க 'ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிர்தம்'.

குருவாயூரப்பனிடம் பக்தி கொண்ட வில்வமங்களசுவாமி, பலமுறை கிருஷ்ணனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்.
வில்வமங்களசுவாமி புகழ் ஊரெங்கும் பரவியது. குரூரம்மை என்னும் உத்தம பக்தையும் அவர் பற்றி கேள்விப்பட்டாள்.

குரூரம்மையின் வீட்டுக்கு பகவான் கிருஷ்ணனே குழந்தையாக வந்து, அவருடன் வாழ்ந்து வந்தான். ஒரு தாயாக குரூரம்மை, கிருஷ்ணனை மிரட்டுவது, அதட்டுவது, அவன் முகம் வாடினால் அழாதடா! அழாதடா!' என சமாதானம் செய்வது, என கிருஷ்ணலீலைகள் குரூரம்மையின் வீட்டில் அரங்கேறிக் கொண்டிருந்தன.
கிருஷ்ணரிடம் தன்னையே கரைத்துக் கொண்ட குரூரம்மை தினமும் அடியார்களுக்கு அன்னமிடும் தொண்டும் செய்தார்.

இந்நிலையில், வில்வமங்களசுவாமி பற்றிக் கேள்விப்பட்ட குரூரம்மை, வீட்டிற்கு அழைத்து பாதபூஜை செய்து பிட்சை இட விரும்பினார்.
நல்லெண்ணம் மனதில் தோன்றியதும், அதை செயல்படுத்துவது பெரியோர் இயல்பு.

ஒரு ஆள் மூலம் மறுநாளே பிட்சைக்கு வரும்படி வில்வமங்களசுவாமிக்கு தகவல் தெரிவித்தார்.
வில்வமங்களசுவாமிக்கு இதில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் ஒரு வழியாக சம்மதிக்க, மகிழ்ச்சியில் குதித்தார் குரூரம்மை.
ஆனால்,கிருஷ்ணரைப் பற்றிய ஒருமுகச் சிந்தனையால் வாக்களித்ததை மறந்தார் வில்வ மங்களசுவாமி.

மறுநாள் பொழுது புலர்ந்ததும், குரூரம்மையின் வீட்டிற்கு செல்லாமல் கால் போன போக்கில் நடந்தார்.
வழியில் ஒரு வீட்டில் பிட்சை ஏற்றார். ஆனால், குரூரம்மையின் வீட்டில், வில்வமங்களசுவாமியின் வருகைக்கான ஏற்பாடு நடந்தது. பூஜைக்கும், பிட்சைக்கும் வேண்டிய பொருட்களை கிருஷ்ணனே சேகரித்தான். வில்வமங்களசுவாமியை எதிர்பார்த்து குரூரம்மை வாசலில் காத்திருந்தார்.
ஊஹூம்..... இரவு தான் வந்ததே தவிர, வில்வமங்களசுவாமி வரவே இல்லை.
கண்ணன் அருகில் இருந்தும், குரூரம்மையின் மனம் வருந்தியது.

பக்தியை தவிர, வேறு சிந்தனை இல்லாத வில்வமங்களசுவாமி கிடைத்த பிட்சையை ஏற்றுக் கொண்டு, வீடு திரும்பினார்.
குரூரம்மைக்கு கொடுத்த வாக்கை முற்றிலும் அவர் மறந்திருந்தார்.

மறுநாள்...அதிகாலையில் வில்வமங்களசுவாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரிடமிருந்த கிருஷ்ணர் சிலை மாயமாகி இருந்தது. ''கிருஷ்ணா.. கிருஷ்ணா'' என்று கத்தியபடி நாலாபுறமும் ஓடினார்.

அப்போது அசரீரியாக,''ஹே!உத்தம பக்தனே! ஈடு இணையில்லாத பக்தன் நீ! அதில் சந்தேகமே இல்லை.ஆனால் உன்னை போன்ற பக்தையான குரூரம்மையின் விருப்பத்தை நிறைவேற்றாமல் என்னை துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாய். இதை பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை சமாதானப்படுத்தினால் மட்டுமே, மறுபடியும் என்னை தரிசிக்க முடியும். ஏழெட்டு பிறவிகளாக குரூரம்மை என் பக்தையாக விளங்குகிறார். நீயோ மூன்று பிறவிகளாக என்னை வழிபட்டு வருகிறாய். இப்போதே குரூரம்மையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடு!" என்றார் கிருஷ்ணர்.

விஷயம் அறிந்த வில்வமங்களசுவாமி குரூரம்மையின் வீட்டுக்கு ஓடினார். தவறை மன்னிக்கும்படி வேண்டினார். குரூரம்மையின் மனம் சமாதானம் அடைந்தபின், வீடு திரும்பினார்.
வில்வமங்களசுவாமியின் வருகையை எதிர்பார்த்து, கிருஷ்ணர் சிலை வடிவில் காத்திருந்தார். மீண்டும் பக்திப்பாடல்கள் பாடி மகிழ்ந்தார்.

என்ன தான் பக்தியில் கரை கண்டாலும், தெய்வத்துடன் பேசும் பாக்கியம் பெற்றாலும் தன்னைப் போன்ற அடியாரின் மனம் நோகச் செய்தால் தெய்வம் ஒருபோதும் பொறுப்பதில்லை.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

வாஸ்து

வாஸ்து வீடு  நுழைவாயில் பூஜையறை கதவு நுழைவாயில் கழிவறை எங்கு இருக்க வேண்டும்?

vaastu
முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘  என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ  அல்லது அந்த மனையிலோ  வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள்.  இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.

வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்:

1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு,  வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி  அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல்  நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட  அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில்  வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘  (எனெர்ஜி )யானது  பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.
2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.
3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.
4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.
5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.
மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.
6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின்,  வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.

ஜன்னல்கள்:

1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும்.  ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.
2.  பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.
3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.
4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.
5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.
படுக்கையறை:
நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.
1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.
2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.  ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு.  வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.
3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும்.  எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.
4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.
5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ்  வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.
.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம்.  வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.
7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

சமையலறை:

நல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால்,  தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள்.  அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.
1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும்  அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.
2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.
3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.
4.  டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.
5.  சமைக்கும்போது  வடக்கு அல்லது கிழக்கு நோக்கி  இருந்தபடி சமைக்கவேண்டும்.

பூஜையறை:

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு  அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும்.  கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.
2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.
3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.
4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல  வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.
5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.
6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.
7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும்,  வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது  வாஸ்துப்படி சிறப்பானது.
8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.
9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.
10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது.   சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.

கழிவறைகள்:

1. வடமேற்கிலும், வடக்கிலும்  குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.
2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.
3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.
4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.
5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.
6. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

வாஸ்து



வாஸ்து
வீடு  நுழைவாயில்,பூஜையறை,கதவு நுழைவாயில் எங்கு இருக்க வேண்டும்?



முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘  என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ  அல்லது அந்த மனையிலோ  வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள்.  இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.

*வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்:*

1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு,  வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி  அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல்  நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட  அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில்  வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘  (எனெர்ஜி )யானது  பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.

2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.

3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.

4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.

5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.
மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.

6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின்,  வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.

*ஜன்னல்கள்:*

1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும்.  ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.

2.  பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.

3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.
4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.

5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.
படுக்கையறை:
நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.

1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.

2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.  ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு.  வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.

3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும்.  எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.

4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.

5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ்  வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.

.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம்.  வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.

7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

*சமையலறை:*

நல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால்,  தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள்.  அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.

1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும்  அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.

2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.

3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.

4.  டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.

5.  சமைக்கும்போது  வடக்கு அல்லது கிழக்கு நோக்கி  இருந்தபடி சமைக்கவேண்டும்.

*பூஜையறை:*

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு  அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும்.  கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.

2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.

3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.

4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல  வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.

5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.

6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.

7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும்,  வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது  வாஸ்துப்படி சிறப்பானது.

8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.

9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.

10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது.   சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.

*கழிவறைகள்:*

1. வடமேற்கிலும், வடக்கிலும்  குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.

2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.

3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.

4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.

5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.

6. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

சிரிப்பு

மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு! அகில உலகத்துக்கும் பொதுவான மொழி அது. பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு. கைக்குழந்தையாக இருந்தபோது ஒரு நாளைக்கு 200-300 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், வளர்ந்ததும் ஒரு நாளைக்கு 15-20 முறைதான் சிரிக்கிறோம். மகிழ்ச்சியை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு... திருக்குறள் முதல் வாட்ஸ்அப் ஸ்மைலி வரை அனைத்தும் அழுத்தமாகச் சொல்வது இதைத்தான். இதில் பலருக்கும் பிரச்னை என்னவென்றால், பிரிஸ்கிரிப்ஷனில் எழுதித்தர முடியாத இந்த மருந்தை எங்கே சென்று வாங்குவது என்பதுதான். 
ஏன் சிரிக்க வேண்டும்?
* மனிதன் மகிழ்ச்சிக்காக ஏன் மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஏனென்றால், உயிர் வாழப் பணம் தேவைப்படும் ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தானே! `வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பது வழக்குமொழி மட்டும் அல்ல... விஞ்ஞான உண்மையும்கூட. எபிநெஃப்ரின் (Epinephrine), நார்-எபிநெஃப்ரின் (Norepinephrine), கார்டிசால் (Cortisol) ஆகியவை மனஅழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். ஆனால், மனம்விட்டுச் சிரிப்பது அந்த ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கிறதாம். அதனாலேயே, இயல்பாகவே மனஅழுத்தம் குறைகிறதாம். இயல்பிலேயே சிரிப்பை அடக்கிவைத்து, அதன் காரணமாகவே நம் ஊர்ப் பெண்களுக்கு ஏற்படுபவைதான் மனஅழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவை. 
* சிரிப்பு, மூளையில் எண்டார்ஃபின்களைச் சுரக்கச் செய்து, நம் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும். ரத்தக்குழாயின் உட்சுவரான எண்டோதீலியத்தின் சுருக்கமும், அதில் கொழுப்புப் படிதலும்தான் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு எனப் பல பிரச்னைகளுக்குக் காரணங்கள். மனம்விட்டுச் சிரிப்பது, அந்த எண்டோதீலியத்தை விரிவடையச் செய்யும். 
பெண்களுக்கு மாதவிடாய் முடிவை ஒட்டி பயமுறுத்தும் புற்றுநோய்களுக்கும், அடிக்கடி சளி, இருமல், தும்மல் வரும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கும் வாய்விட்டுச் சிரிக்காததும் ஒரு காரணமே. 
* உயர் ரத்த அழுத்தம் தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் குறைவால் வரும் மாரடைப்புகளே அதிகம் எனப் பல ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மாரடைப்பைத் தள்ளிபோடும் விலையில்லா மருந்து, வயிறு குலுங்கவைக்கும் சிரிப்பு! 
* சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் தளர்வாக்கும்; வலி நீக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல்... போன்ற மூளையின் செயல்திறனைக் கூர்மையாக்கும்.
* `தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பதுபோல, `தினமும் 25 தடவை சிரித்தே ஆக வேண்டும்’ என்பதும் நலவாழ்வுக்குக் கட்டாயம். 
சிரிப்பு
சிரிப்புக்கு நேர் எதிரானது கோபம். `கொஞ்சமே கொஞ்சம் சரியான கோபம் தவறு அல்ல. ஆனால், எங்கே, எப்படி, எந்த அளவில், யாரிடம், எப்போது, எங்ஙனம்... என அலகுகள் தெரியாமல் காட்டப்படும் கோபம், கோபப்படுபவனைத்தான் அழிக்கும்’ எனச் சொன்னவர் அரிஸ்டாட்டில். அதீத கோபம் வந்தால், பி.பி எகிறி வாயைக் கோணவைக்கும் பக்கவாதம், வாழ்வையே கோணலாக்கும் மாரடைப்பு போன்றவை வர வழிவகுக்கும். 
கோபத்தை திசை திருப்புவது எப்படி? `கோபப்படுகிறோம்’ எனத் தெரிந்த அந்த விநாடியிலேயே, சொல்லவந்த வார்த்தையை, முகக்கோணலை, செயலை அப்படியே தடலாடியாக நிறுத்திவிட வேண்டும். சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, `அது அவசியமா?’ என யோசிக்க வேண்டும். பல சமயங்களில், `அது அநாவசியம்’ எனத் தெரியும். 
* கோபம் உண்டாகும் தருணங்களில் மூச்சை நன்கு உள்ளிழுத்துவிடவும்; கோபத்தை வளர்க்கும் அட்ரினலின் ஹார்மோன் கட்டுப்படும். 
* நெருக்கமானவர் நம் மீது தொடர்ந்து கோபப்பட்டுக்கொண்டே இருந்தால், ஃப்ளாஷ்பேக்கில் போய் எத்தனை கொஞ்சல், கரிசனம், காதல் தந்தவர் அவர் என்பதைச் சில விநாடிகள் ஓட்டிப் பார்த்து, சிந்தியுங்கள். கூலாகிவிடுவோம். * அடிக்கடி தேவையற்றதற்கெல்லாம் வரும் கோபத்துக்குப் பின்னணியாக மனஅழுத்தம் காரணமாக இருக்கலாம். மனநல மருத்துவர் உதவியும்கூட தேவைப்படலாம். கோபப்படாமல், அவர் உதவியை நாடவும். 
* கோபத்தைத் தொலைக்க வேண்டுமே தவிர, மறைக்கக் கூடாது. மறைக்கப்படும் கோபம், கால ஓட்டத்தில் மறந்துபோகாமல், ஓரத்தில் உட்கார்ந்து விஸ்வரூபம் எடுத்து, நயவஞ்சகம், பொறாமை... எனப் பல வடிவங்களை எடுக்கும். 

சிரிக்கச் சில வழிகள்... 
* `ஓ போடு’வில் தொடங்கி, கைகுலுக்கல், அரவணைப்பு, சின்ன முத்தம், முதுகு தட்டல், கைதட்டல்... இவையெல்லாம் சிரிப்புக்கு சினேகிதர்கள். சிரிப்பைக் கொண்டுவர, இவற்றில் ஏதாவது ஒன்றை முயற்சிக்கலாம். 
* `வாட்ஸ்அப்’பில் வலம்வரும் ஜோக்குகள், ஹீரோ பன்ச்களை உட்டாலக்கடி காமெடி ஆக்குவது, வசனம் இல்லாத சாப்ளின் படத்தில் அவரின் சேட்டைகளைப் பார்ப்பது... என  தினமும் ஏதாவது ஒன்றைப் பார்த்து, ரசித்து, அனுபவித்துச் சிரித்தால்தான் தொற்றாநோய்களை தள்ளிப்போடலாம்... தவிர்க்கலாம்
* வீட்டுச் செல்லக் குழந்தைகளைச் சிரிக்கவைக்க முயற்சி செய்யுங்கள். யானை அம்பாரி ஏறவைத்து விளையாடுவது தொடங்கி, முகத்தில் சேட்டை ரியாக்‌ஷன்களைக் கொடுத்து அவர்களைச் சிரிக்கவைப்பது வரை எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். அவை குழந்தைகளை உங்களுடன் நெருக்கமாக்கும். அவர்களின் மனங்களும் மலரும். 
* சிரிப்பை வரவைக்கும் படங்கள், வீடியோக்கள், குட்டிக் கதைகள் போன்றவை இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் தரமான வலைதளங்களை புக்மார்க் செய்து வைத்துக்கொண்டு, தினமும் சில நிமிடங்களுக்காவது அவற்றைப் பார்த்து ரசிக்கலாம். 
சிரித்துப் பாருங்கள்... அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு சொர்க்கமாகவே தெரியும். 
தொகுப்பு: பாலு சத்யா