செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சங்கடஹர சதுர்த்தி

 🙏சங்கடஹர சதுர்த்தி🙏

சங்கடங்கள் நீக்கிடும் "சங்கடஹர சதுர்த்தி" விரதம்விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள்.



சதுர்த்தி விரதம்:



     ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர். விரதத்தின் பலன்கள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும்.



     வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.



விரதம் இருப்பது எப்படி?



     சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.



சதுர்த்தியின் மகிமை :



     சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.

வாஸ்து



மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பார்கள். மனைவி மட்டுமல்ல, மனைவியுடன் சேர்ந்து வாழப்போகும் வீடு அமைவதும்கூட இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்லவேண்டும். தெற்கு வீடு என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று ஒதுக்கிவிடுகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட நாம், அப்படி தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீட்டை ஒதுக்குவது சரிதானா என்று யோகஶ்ரீ வாஸ்து பேராசிரியர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதியிடம் கேட்டோம்.

''தெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள். கிழக்கும் வடக்கும்தான் ராசியான மனைகள் என்று பலரும் நினைக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே இப்படி சிலர் புறக்கணிப்பதால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். சொல்லப்போனால், 'சிம்ம கர்ப்ப மனைகள்' என்றழைக்கப்படும் தெற்குப் பார்த்த மனைகள், அதில் இருப்பவர்களுக்குத் தைரியம் தரும் மனைகளாக அமைந்திருக்கின்றன.

பல பெரிய தொழிலதிபர்களின் தொழிற்சாலைகள், தெற்குப் பார்த்த மனைகளாக அமைந்துள்ளன என்பது பலரும் அறியாத தகவல்களாகும். இத்தனைக்கும் பலராலும் கைவிடப்பட்ட நிறுவனங்களாகக் கூட அவை இருக்கும். இவர்கள்தான் தொழில் புரட்சியாளர்களாகவும் திகழ்வார்கள்.

அதேவேளையில், வடக்கு, கிழக்கு மனைகளில் வசித்தாலும் காரணமில்லாமல் பல பிரச்னைகளோடு வாழ்பவர்களும் உண்டு. இதற்குக் காரணம் முறையான வாஸ்து சாஸ்திரப்படி அந்த மனைகள் அமையாததுதான்.

இதே போல் வாஸ்துப்படி அமைந்த தெற்குப் பார்த்த மனைகளில் வசிப்பவர்களுக்குப் பணம் மிதம் மிஞ்சி கொட்டுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.  காரணம் தெற்கு மனையை 'ஐஸ்வர்ய மனை' என்று சொல்வார்கள். வாஸ்துப்படி ஐஸ்வர்யம் என்பது, வற்றாத செல்வ வளத்தையும், மக்கட் பேற்றையும் குறிக்கும்.

தெற்குமனை, என்பது எல்லா ராசிக்காரர்களுக்கும் பொருந்துமா? என்று கேட்டால், நிச்சயம் பொருந்தாது. தெற்குப் பார்த்த மனையானது, ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்மராசி அன்பர்களுக்கு யோகமுள்ள மனையாகின்றது.

இந்த ராசிக்காரர்கள் தெற்குமனைகளைத் தாராளமாக விலைக்கு வாங்கிக் கட்டடம் கட்டலாம். இதே போல் ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களும் இத்தகைய மனைகளில் வீடு கட்டி குடியேறலாம்.
தாய்க்குப் பின் தாரம் என் பது நமது கிராமப்புறங்களில் உள்ள பழமொழியாகும். அதனால், தாயாரின் ராசி, லக்னப்படியோ, மனைவியின் லக்னப்படியோ வீடுகளை அமைப்பது நல்லது. ஏனென்றால், நாம் எங்குக் குடியிருந்தாலும் அவரவரது வாழ்க்கைத்துணையின் லக்னப்படியே வீடுகளைத்தேர்வு செய்யவேண்டும். தெற்குப் பார்த்த மனைகளில் வீடு கட்டும்போது வீட்டை எந்த வகையில் கட்டமைக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.
 சமையலறை -  தென்கிழக்கு (அக்னி பாகம்), வடமேற்கு (வாயுவியம்)
பூஜை அறை - வட கிழக்கு, கிழக்கு, மேற்கு,
படுக்கையறை - தென் மேற்கு  (நைருதி ), மேற்கு, தெற்கு
ஹால் (விருந்தினர் அறை) - நைருதி நீங்கலாக எங்கு வேண்டுமானாலும், அமைக்கலாம்
கழிப்பறை - தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.
தண்ணீர்த் தொட்டி (ஸம்ப்) - வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.
தெற்கு வாசல் அமைந்த மனைகள், வீடுகளுக்கு வாஸ்து விதிகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தெற்குப் பார்த்த வீடுகளில் வசிப்பவர்கள் மேற்குப் பார்த்த வீட்டைச் சேர்ந்தவர்களிடம் சம்பந்தம் செய்யக்கூடாது. மேற்குக்கும் தெற்குக்கும் ஆகாது. தேவையற்ற வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். ஜாதகம் இல்லாதவர்களுக்குத் தெற்குப் பார்த்த வாசலும் தெற்குப் பார்த்த மனைகளும் யோகம் தரும். 

திங்கள், 2 ஏப்ரல், 2018

லக்கினம்


இதில் உங்கள் லக்னம் எது? உங்களுடைய வாழ்க்கை இப்படிதான் இருக்கும் !!
உங்கள் லக்னப்படி என்ன செய்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம் தெரியுமா?

மேஷம் :

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே எல்லோரையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்கள் அறிவாளிகளாகவும் திகழ்வார்கள்.

ரிஷபம் :

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே அழகான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். அதோடு இரக்க குணமும், மற்றவர்களை புரிந்துக்கொள்ளும் தன்மையும் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

மிதுனம் :

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். இவர்கள் சுறுசுறுப்பாகவும், அறிவாளிகளாகவும் இருப்பார்கள். அனைவரிடத்திலும் அன்பு, பாராட்டும் குணம் இவர்களிடம் இருக்கும்.

கடகம் :

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே தான் செய்ய நினைப்பதை எப்படியாவது செய்து முடிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அறிவாளிகளாகவும், ஆடல் பாடல் போன்ற கலைகளில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

சிம்மம் :

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே சற்று முன்கோபம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாருக்கும் அவ்வளவு எளிதில் கட்டுப்பட மாட்டார்கள். தன்னுடைய சொந்த காலில் எப்போதும் நிற்கவேண்டும் என்ற எண்ணம் உடைய இவர்கள், நேர்மையாகவும் மற்றவர்களிடம் பெருந்தன்மையாகவும் நடந்துக்கொள்ளும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

கன்னி :

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக தங்களை அறிவுச்சார்ந்த பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவார்கள். மற்றவர்களை எளிதாக கவரக்கூடிய குணம் உள்ள இவர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

துலாம் :

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற மன உறுதியும், லட்சியமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எத்தகைய பிரச்சனை வந்தாலும் அதை நீதி தவறாமல் சமாளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நிர்வாக திறமை இவர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும்.

விருச்சகம் :

விருச்சக லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சற்று பிடிவாத குணம் கொண்ட இவர்கள் தன் வேலையில் கெட்டிக்கார தனத்தோடு செயல்படுவார்கள். ஒரு வேலையை தொடங்கினால் அதை முடித்தே தீர வேண்டும் என்று கடைசி வரை போராடுவார்கள்.

தனுசு :

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே அனைவரிடத்திலும் கனிவோடு நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒழுக்கமுடையவர்களாகவும், இறை பக்தி கொண்டவர்களாகவும் விளங்கும் இவர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

மகரம் :

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே நல்ல சாதுர்யமாக பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்வில் முன்னேற்றம் அடைய பல திட்டங்களை வகுத்து அதன்படி நடந்து வெற்றி காண்பீர்கள். அனைவரிடத்திலும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் அற்புத குணம் இவர்களிடம் இருக்கும்.

கும்பம் :

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கும். செல்வமும், செல்வாக்கும் உயர் பதவிகளும் இவர்களை தானாக தேடி வரும். இவர்கள் பல நேரங்களில் தற்பெருமையை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மீனம் :

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக எப்போதும் மலர்ந்த முகத்தோடு காணப்படுவார்கள். இவர்களிடம் இருந்து எந்த ரகசியத்தையும் அவ்வளவு எளிதில் பெற முடியாது. அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்ட இவர்களுக்கு சற்று முன்கோபம் அதிகமாகவே இருக்கும்.

வாஸ்து

Google.com/+bharathegopu
வாஸ்துப்படி என்று பார்த்தால் இரண்டு இருக்கிறது. ஒன்று மனையடி சாஸ்திரம், மற்றொன்று வாஸ்து. அதாவது பூமியினுடைய அமைப்பை முதலில் பார்க்க வேண்டும். சதுர மனையா? செவ்வக மனையா? அல்லது ஈசானி குறைந்திருக்கிறதா? அல்லது அக்னி மூலை வளர்ந்திருக்கிறதா? போன்றெல்லாம் மனையின் அமைப்பை முதலில் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் சென்னை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலெல்லாம் மனை வாங்குவது என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. அதனால் கட்டிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், முதல் மாடி, 2வது மாடி என்று ஆகிவிடுகிறது.

அதனால் இறுதியாக என்ன பார்க்க வேண்டுமென்றால்? வடகிழக்கு ஈசானி மூலை அது கொஞ்சம் காலியாக இருந்தால் நல்லது. அதில் அதிகமான சுமை இல்லாமல் காலியாக இருப்பது நல்லது. பிள்ளைகள் படிப்பதற்கு அல்லது உறவினர்கள் வந்தால் தங்குவதற்காகக் கொடுக்கலாம். அதற்கடுத்து தாய், தந்தை, பாட்டன் பாட்டி இருந்தால் அவர்களை அங்கு தங்க வைக்கலாம். பொதுவாக ஈசானி அறையில், அதாவது வடகிழக்கு அறையில் பெரியவர்களை தங்கவைத்தால் வேறு ஏதாவது வாஸ்து தோஷம் இருந்தால் கூட அது போய்விடும். இதுபோன்ற சில விஷயங்கள் இதில் உண்டு.

அதற்கடுத்து அக்னி மூலை என்பது தென்கிழக்கு. இதில் சமையலறை இருந்தால் நல்லது. தென்மேற்கு என்பது கன்னி மூலை. அதுதான் குபேர மூலை. மாஸ்டர் பெட்ரூம். அதாவது இல்லத்தின் தலைவன், தலைவி தங்குவது நல்லது. அதற்கடுத்து வாயு மூலை. இதிலும் ஒரு பெட்ரூம் வரலாம். இதிலும் வருபவர்களை தங்கவைக்கலாம். மற்றதெல்லாம் இருக்கலாம். இதுதான் அடிப்படை வாஸ்து. இது இருந்தாலே ஓரளவிற்கு அனைத்தும் சாதகமாக இருக்கும்.

அறுபடை வீடு

அறுபடை வீடுகள்
01.திருப்பரங்குன்றம்
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்
றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
02. திருச்செந்தூர்
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.
03. பழநி
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.
04. சுவாமிமலை சிவகுருநாதன்
சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். "தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்' என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ""சிவகுருநாதன்'' என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.
05. திருத்தணி முருகன்
அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை' என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.
06. சோலைமலை[திருப்பரங்குன்றம்]
அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வைக்கிழவியிடம்,"" சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,'' என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். ""அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.

கோவில் கோபுரம்

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?

இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.

அது நாலாபுறமும் 75000 சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..


ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

வலம்புரி சங்கு

பூவுலகம் தோன்றிய நாள் முதல் ஏற்பட்ட ஒலி அலைகளும், ஒளி அலைகளும், பஞ்ச பூதங்களின் மூலமாக தமது அதிர்வுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. சாதாரணமாக நமக்கிருக்கும் கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் திறம் ஆகியவற்றால் மட்டுமே அவற்றை அறிவது சிரமமான ஒன்று. இயற்கையில் உள்ள பல பொருட்களில், ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் தாமாக வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக சங்கின் மூலம் ஓம்காரம் வெளிப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். 

பாற்கடலில் தோன்றியது


தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டு மல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத் திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

சங்கின் வகைகள்


வைணவ ஆகமங்களில் ஒன்றான வைகானஸ (விகனஸ) ஆகமத்தில், ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய சங்குகள் பற்றி குறிப்புகள் இருக்கின்றன. திருமலை வேங்கடவன் கை களில் மணி சங்கும், ரங்கநாத சுவாமியின் கைகளில் துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமியின் கைகளில் பாருத சங்கும், பார்த்த சாரதி பெருமாளின் கைகளில் வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாரது கைகளில் பார் சங்கும், சவுரி ராஜ பெருமாள் கையில் துயிலா சங்கும், கலிய பெருமாளின் கரங்களில் வெண் சங்கும், ஸ்ரீநாராயண மூர்த்தியிடம் பூமா சங்கும் இருப்பதாக வைகானஸ ஆகமம் குறிப்பிடுகிறது.

வாஸ்து பரிகாரம்

பொதுவாக வீடுகளில் அமைந்திருக்கும் வாஸ்து குறைகளை நீக்குவதற்கு, மஞ்சள் கலந்த நீரில் துளசியை இட்டு சங்கு தீர்த்தமாக காலை நேரங்களில் தெளித்து விட்டால் அந்த குறைகள் நீங்குவதாக ஐதீகம். பழங்காலத்தில் மக்கள், செல்வ செழிப்போடு இருக்க வீடுகளின் தலை வாசலில் சங்கு பதித்து வைப்பது வழக்கம். அதாவது, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசல் படியில் பதித்து விடுவார்கள். அதன் மூலம் குறைகள் இல்லாத வாழ்க்கை அமைவதாக அவர்கள் நம்பினார்கள்.

கோவில் மணி

பெரும்பாலான கோவில்களில் மணி அடிப்பது மற்றும் சங்கு ஊதுவது போன்ற நடைமுறைகள் இருப்பதை கவனித்திருப்போம். சங்கு ஊதுவது என்பது தற்போதைய சூழலில், அபசகுனம் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. வேதங்களின் உட்பொருளான ஓம்கார மந்திரத்தை நினைவுபடுத்துவதாகவும், ‘அர்த்தம்’ எனப்படும் பொருள் வளத்தை தருவதாலும் கடவுளுக்கு முன்பு வைத்து வணங்கப் படும் தன்மையை சங்கு பெற்றிருக்கிறது. மேலும், மங்களகரமான பூஜை வேளைகளில் தேவையற்ற பேச்சுகள் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தை குறைத்து விடாதிருக்க சங்கநாதம் உதவி செய்கிறது. கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கு ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. மகாகவி பாரதியும் ‘சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே..’ என்று வெற்றியை பறை சாற்றும் பொருளான சங்கு பற்றி பாடுகிறார்.

கிருமிகளைக் கொல்லும்


சங்கிற்கு உடலை பாதிக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள். அதனால்தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாக கருதப்பட்டது. குழந்தைகளுக்கு அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றி தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது. சங்கநாதம் கேட்கும் இடங் களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மேலும் பெண்கள் வளையல்கள் அணிவதை பார்த்திருப்போம். ‘வளை’ என்பது சங்கு என பொருள்படும். ஆரம்ப காலங்களில் சங்கின் மூலமாகத்தான் இது தயாரிக்கப்பட்டது. பின்னர் கண்ணாடி, தங்கம், வெள்ளி என உபயோக முறைகள் மாற்றப்பட்டுவிட்டன. சங்கு ஆபரணமாக பயன்படுத்தப்பட்டதோடு, ஆயுர்வேத வைத்தியத்தில் பஸ்பமாகவும் பயன்படுகிறது.

அட்சய திருதியை

மக்களிடையே பிரபலமாக இருக்கும் அட்சய திருதியை நாளன்று, வலம்புரி சங்குடன் தங்கம் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால் ஐஸ்வர்ய வளம் நாளும் வளரும் என்பது வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். வலம்புரி சங்கை வெறுமனே ஒரு தட்டில் வைக்கக்கூடாது என்பதால், அதற்கு பொருத்தமான அளவில் வெள்ளிக் கவசம் செய்து பொருத்திய பின்னர் வீட்டுக்கு கொண்டு வந்து, அதற்கான ‘ஸ்டாண்டில்’ வைப்பது அவசியம். அதற்கு தினமும் பசும்பால் அபிஷேகம் செய்து, பூஜை செய்து வந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கியிருப்பாள் என்பது உறுதி.

வீடுகளில் செய்யப்படும் வலம்புரிச்சங்கு பூஜையும், அதன் பலன்களும்..

* வீட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் வலம்புரி சங்கானது, குபேரனது அருளை பெற்றுத் தருவதோடு, மகாலட்சுமியின் நித்திய வாசத்தையும் அருளக்கூடியது.

* வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.

* கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். அப்போது 108 சங்கு அபிஷேக பூஜைக்கு நடுவில் வலம்புரிச்சங்கு உருவத்தில் குபேரன் எழுந்தருளுவதாக ஐதீகம்.

* கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.

* ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம் கைகூடும்.

* கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்குக்கு, பவுர்ணமி தோறும் குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு. 16 எண்ணிக்கையில் வலம்புரி சங்கு கோலமிட்டு, நடுவில் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்வது நல்லது.

* சுத்தமாகவும், கச்சிதமாகவும் பூஜிக்கப்படும் வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்கு, பில்லி சூனிய பாதிப்புகள் நெருங்காது.

* வீட்டில் உள்ள பூஜை அறையில், சிறு தட்டில் பச்சரிசி, அதில் சங்கை வைத்து, பூ சூட்டி பொட்டு வைத்து வணங்கி வந்தால் உணவு பஞ்சம் இருக்காது. 

முச்சங்கு ஒலி

பழங்காலங்களில் ஒரு மனிதருடைய வாழ்வில், மூன்று முறை சங்கநாதம் ஒலிக்கப்பட்டது. அதன் மூலமாக எழக்கூடிய சுப நாதமானது, சம்பந்தப்பட்ட மனிதருக்கு நற்பலன்களை உண்டாக்குவதாக நம்பப்பட்டது. தற்போது நடைமுறையில் அவ்வளவாக இல்லாத அந்த பழக்கத்தில் பல்வேறு உள்ளர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் ஒலிக்கப்பட்ட மூன்று சங்கநாதங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

முதல் சங்கு

‘முதற்சங்கம் அமுதூட்டும், நடுச்சங்கம் நல்வழி காட்டும், கடைச்சங்கம் காதவழிபோம்’ என்று நமது முன்னோர்களால் குறிப்பிடப்பட்டது. முதல் சங்கு என்பது ஒரு குழந்தை பிறந்தவுடன் ஒலிக்கப்படுவதோடு, முதன்முதலாக சங்கில் பாலூட்டுவதும் மரபாக இருந்து வந்தது. அதிலும் வலம்புரி சங்கு மூலம் பாலூட்டப் படும் ஆண் குழந்தை வீரமும், நன்னெறியும் கொண்டதாக வளருவதாக கருதப்பட்டது.

இரண்டாவது சங்கு

இரண்டாவது சங்கு என்பது ஒருவரது திருமணத்தின்போது ஒலிக்கப்படும். அதாவது இரண்டு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் சம்பிரதாய நெறிமுறையாக இருந்து வந்தது. காதில் சங்கை வைத்து கேட்டால் மட்டுமே ஓம்கார ஓசை கேட்கும். அதேபோல ஒருவருக்கு ஒருவர் அவரவர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்பதன் வாயிலாக, பிரச்சினைகளை காதோடு காது வைத்ததுபோல சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் சங்கநாதம் ஒலிக்கப்பட்டது. 

மூன்றாவது சங்கு

இது ஒருவரது மரணத்தின் பின்பு ஒலிக்கப்படுவதாகும். இறந்தவர், இறைவனுக்கு சமமாக சொல்லப்பட்டது. இனம், மதம், உயர்வு, தாழ்வு, ஜாதி வேற்றுமைகள் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு எல்லோரும் கூடும் இடங்கள் மூன்று உண்டு. அவை ஆலயம், பள்ளிக்கூடம், மயானம் ஆகியவை. ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறுதியில் அனைவரும் ஒன்றுகூடும் மயான பூமிக்கு அவர் கொண்டுவரப் படும்போது, புனிதம் பெற்றவராக வரவேண்டும் என்ற கருத்தில் ஒலிக்கப்படுவது மூன்றாவது சங்கநாதம் ஆகும். 

சனி, 31 மார்ச், 2018

திருஷ்டி தோஷங்கள்

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். சில மகாபாக்யவான்கள் பிறக்கும்போது சகல யோகத்துடன் பிறக்கிறார்கள். வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் நமக்கு துன்பம். 

நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது பொறுமலாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. எனவேதான் பெரியோர்கள் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொன்னார்கள். 
கல்லடி - கண்ணடி “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்களுக்கும் உண்டு. 

ஒரு மாந்தோப்பில் ஒரு மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது. அந்த வழியாக சென்ற ஒருவனின் பொறாமை பார்வை அதன்மீது பட்டது. ஒரு சில தினங்களிலே நன்றாக இருந்த மரம் அதன் செழிப்பை இழந்து, காய்களில் ஒருவித நோய் தாக்கி கீழே உதிர்ந்து விழுந்தன. அதே நேரத்தில் தோப்பிற்குள் இருந்த மற்ற மரங்கள் நன்றாக இருந்தன. இதைத்தான் கண் பார்வை தோஷம் என்பார்கள். கல்லால் அடித்து இருந்தால் இரண்டு, மூன்று மாங்காய்கள்தான் சேதமடைந்து இருக்கும். ஆனால் கண்ணடி பட்டதால் முழு மரத்துக்கும் சேதாரமாகி விட்டது. 

கண் பார்வை தோஷம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல் மனதில் எழும் தீய குணங்களை முகம் காட்டிக் கொடுத்துவிடும். இந்த தீய எண்ணங்களின் ஜுவாலை நம் கண்கள் மூலம் வெளிப்படும். ஒரு பெண்மணி விலை உயர்ந்த புடவை உடுத்திக் கொண்டு கோவிலுக்குச் சென்றார். அங்கு அவர் தோழியும் வந்திருந்தார். அவர் வந்ததில் இருந்தே புடவையை பற்றி புகழ்ந்து பேசி, “என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது“ என்று சொன்னார். பெண்மணிக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனால் மறுநாள் அந்தப் புடவை ஆணியில் மாட்டி பெரிய கிழிசல் ஏற்பட்டு விட்டது. 

கிரகப் பார்வை தோஷங்கள்

பார்வைகளிலே சுப பார்வை, அசுப பார்வை என இருவகை உண்டு. பரந்த மனப்பான்மை உள்ளவர்களுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கும். இவர்கள் தொடங்கி வைக்கும் காரியங்கள் விருத்தியாகும். இவர்களை கைராசிக்காரர்கள் என்று சொல்வார்கள். இந்த பார்வை, ராசி மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் கிரகங்களுக்கும் உள்ளது. ஜாதகத்தில் குரு பார்வை மிகவும் சிறப்பாகும். குரு பார்க்க கோடி நன்மை குவியும் என்பது சாஸ்திர வாக்கு. சனி பார்வை சர்வ நாசம் என்பார்கள். அதேபோல் உச்சபலம் பெற்ற கிரகத்தின் பார்வை யோகத்தை கொடுக்கும். 

நீச்ச பலம் பெற்ற கிரகத்தின் பார்வை தோஷத்தை கொடுக்கும். சூரியன், சந்திரன் சமசப்தமமாக பார்க்கும்போதுதான் பவுர்ணமி உண்டாகிறது. இதன்மூலம் பார்க்கும் பார்வைக்கு உள்ள பலம் என்ன என்பதை நாம் உணர முடிகிறது. மகான்களுக்கு பல சக்திகள் உண்டு. அதில் பிரதானமானது அவர்களின் கருணை மிகுந்த அருள் பொங்கும் பார்வையாகும். அவர்கள் பார்வை மூலம் நம்மீது உள்ள திருஷ்டி, தோஷங்கள், தீய சக்திகள் விலகும் என்பது ஐதீகம். இதை நயன தீட்சை என்பார்கள்.

திருஷ்டி உள்ளதை எப்படி உணருவது?

நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம். 

கிரக தோஷ திருஷ்டி பீடைகள்

நம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து வருகிறோம். நல்ல யோகமான திசைகள் நடக்கும்போது எல்லா விஷயங்களும் சாதகமாகவும், மளமளவென்றும் கூடிவரும். யோகமான திசையில் சில கெட்ட ஆதிபத்ய புக்திகள் வரும் நேரத்தில் திடீர் சறுக்கல்கள், எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படும். திடீர் விபத்துகள், மருத்துவ செலவுகள், கைப்பொருள் இழப்பு போன்றவை எல்லாம் 6, 8, 12-ம் அதிபதியின் திசா, புக்தி, அந்தரங்களில் ஏற்படலாம். லக்னம், ராசியில் நீச்ச கிரகம் வந்து அமரும்போது காரியத்தடை, வீண் வம்புகள், மனச்சஞ்சலம், பொருள் நஷ்டம் போன்றவை வந்து நீங்கும். பட்ட காலிலே படும் என்று சொல்வார்கள். அதுபோல கெட்ட திசைகள், நீச்ச அம்சம் உள்ள திசைகளில்தான் இந்த கண் திருஷ்டி, பொறாமை போன்றவை ஒன்று சேர்ந்து வரும். கிரக திசா புக்தி அமைப்புகள் வலுவாகவும், யோகமாகவும் இருந்தால் திருஷ்டியின் வேகம் தணிந்து விடும். கிரக சுபபார்வை நமக்கு அரணாக இருந்து காக்கும் என்பது அனுபவ உண்மையாகும்.

திருஷ்டி பரிகாரங்கள்

ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது.  அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

திதிகள்: அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

சென்னையை அடுத்த மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டி பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இது திருஷ்டி நீக்கும் ஸ்தலமாகும். இங்கு சென்று வழிபடுவதன் மூலம் பொறாமை குணங்கள் மறையும். ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்க்கலாம். 

ருத்ராட்சம்

ருத்ராட்சம் பல முகங்கள்

ஏகமுக ருத்ராட்சம்:

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.

2 முக ருத்ராட்சம்:

சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.

3 முக ருத்ராட்சம்:

ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.

 4முக ருத்ராட்சம்:

கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.

5முக ருத்ராட்சம்:

கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.

6முக ருத்ராட்சம்:

ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.

7 முக ருத்ராட்சம்:

மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.

8 முக ருத்ராட்சம்:

8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.

9 முக ருத்ராட்சம்:

இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.

10 முக ருத்ராட்சம்:

இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.

11 முக ருத்ராட்சம்:

தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.

12 முக ருத்ராட்சம்:

இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.

13 முக ருத்ராட்சம்:

6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.

14 முக ருத்ராட்சம்:

இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.

 ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.
 
அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணி யும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குரு நாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக் கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண் களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்று ம் குரோதம் கிடையாது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்த த்தை குறைக்கும் சக்தியும் ருத் ராட்சத்திற்கு உண்டு. பக்கவாத த்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளி யை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெ ல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கு ம். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு.

தாலியில் மூன்று முடிச்சு போடுவது ஏன்

தாலியில் மூன்று முடிச்சு போடுவது ஏன்

எத்தனை நகை அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு.

திருமணத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவது ஏன்?

இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது அவ்வை வாக்கு. திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்றனர். திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது....மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர். 

திருமாங்கல்யக் கயிறில் மூன்று முடிச்சு இடுவது தான் தாலிகட்டுதல். 

விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இப்படி மூன்று முடிச்சுக்குள் எத்தனையோ காரண முடிச்சுகள் உள்ளன. 

இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக போடப்படுவது முதல் முடிச்சு. 

முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு. பெற்றோர்கள், திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக கட்டப்படுவது மூன்றாம் முடிச்சு. 

அறம், பொருள், இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு. பிரம்மா, விஸ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது. கணவன், மூத்தோன், இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க மூன்று முடிச்சு.

அம்பிகையின் மகிமையைப் போற்றும் லலிதா சகஸ்ர நாமத்தில், காமேச பந்த மாங்கல்ய சூத்ர சோபிதா கந்தரா என்று அம்பிகை போற்றப்படுகிறாள். 

சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்யச்சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள் என்பது இதன் பொருள். ஆயிரமாயிரம் ஆபரணங்களை அணிந்தாலும் அம்பிகைக்கு அழகு சேர்ப்பது மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறு தான். 

ஆதிசங்கரர், சவுந்தர்யலஹரியில் அம்பாளின் திருமாங்கல்ய மகிமையைப் போற்றுகிறார். எத்தனை நகை அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.

நாக தோஷம்



திருமணத்தடை ஏற்படுத்தும் நாகதோஷம்... அதற்கு உரிய பரிகாரங்கள்

''திருமணத்துக்கு வரன் தேடிக்கிட்டிருக்கிற பெற்றோரைக் கேட்டால், அவங்களே சொல்லிடுவாங்க, 'நாகதோஷத்தாலதாங்க திருமணம் தடையா இருக்குன்னு. அதென்ன நாகதோஷம்... தீர்க்க முடியாத தோஷமா அது... அதுக்கும் பரிகாரங்கள் இருக்கு..."

"நாகதோஷத்துக்கு உரிய கிரகங்கள் ராகு, கேது. ஜோதிட சாஸ்திரத்துல தொடக்கத்துல ஏழு கிரகங்கள்தான் இருந்திருக்கு. பிற்காலத்துலதான் ராகுவும் கேதுவும் சேர்க்கப்பட்டிருக்கு. சில ஜோதிட நூல்கள், சனியைப் போல் ராகு, செவ்வாயைப் போல் கேது எனக் கூறுகின்றன. 

சனி கிரகம், நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்போது ஏற்படக்கூடிய புழுதிப்புயலை ராகு என்றும், செவ்வாய் கிரகம் சுற்றும்போது அந்தக் கிரகத்தைச் சுற்றி ஏற்படும் புழுதிப்புயலை கேது என்றும் கூறுகிறார்கள். இவற்றை சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்லுவாங்க. இந்த நிழல் கிரகங்கள், நிஜ கிரகங்களான சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், செவ்வாய், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின்  தன்மையை வேகத்தைக் குறைக்கச் செய்கின்றன. அதனால்தான் இந்த ராகு, கேது தோஷம் பெரிய அளவுல பேசப்படுது.

ராகு என்ன மாதிரியான கிரகம்னு பார்த்தீங்கனா நம்ம பாட்டன், பாட்டியோட கிரகமாகும். நம்முடைய பாட்டன், பாட்டி ஏதாவது தவறுகள், பாவங்கள் செய்திருந்தால் அந்த தோஷமானது ஜீன் வழியாக நமக்குத் தொடர்கிறது.

கணவன், மனைவியின் தாம்பத்திய வாழ்க்கையில் இயற்கையாக கரு கலைந்துபோவது பாவம் அல்ல. ஆனால், அடிக்கடி கருக்கலைப்பு செய்வது, 'இதுவா, அதுவா'னு பார்த்துவிட்டு கருக்கலைப்புச் செய்வது பாவமாகும். இப்படிச் செய்பவர்களுக்கு அடுத்து வரும் வாரிசுக்கு ராகு, கேது தோஷம் ஏற்படுகிறது. ராகு,பெண்கள் ஆதிக்கம் உள்ள கிரகம். பெண்களுக்குத் துரோகம் செய்தாலும் தோஷம் ஏற்படும். 'கல்யாணம் செய்துகொள்கிறேன்' என காதலிச்சிட்டு, பிறகு அவர்களைக் கைவிவிடுவது, கொஞ்ச நாள்  சேர்ந்து வாழ்ந்துட்டு, பிறகு விலகுவது இதெல்லாம் பாவமாகும். இவர்களின் வாரிசுகளுக்கும் ராகுவால் தோஷம் ஏற்படும்.

கேதுங்கிறது ஆன்மிக கிரகம். ஞானக்காரகன் என்றே கேதுவைச் சொல்வார்கள். குருவை நிந்தனை செய்யும்போது, நமக்கு ஆசானாக இருப்பவர்களுக்குக் கெடுதல் செய்யும்போது, வழிபாட்டுத் தளங்களைச் சிதைக்கும்போது, வழிபாட்டுக்கு உரியவர்களை வசைபாடும்போது அவர்களின் சந்ததிகளுக்கு கேது தோஷம் ஏற்படுகிறது.

புதையல் பொருள்கள், அடுத்தவர்களின் பொருள்கள், கோயில் சொத்துகள் இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளும்போது, பிறருக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆலய பொருள்களை கவர்ந்துகொள்ளும்போது ராகு- கேது தோஷம் ஏற்படுகிறது. அடுத்தவர்களை ஏமாற்றினாலும், நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் இந்த ராகு, கேது தோஷம் ஏற்படுகிறது.



தீண்டாத பாம்புகளை அடித்துக்கொன்றாலும், இந்த தோஷம் ஏற்படும். பாம்புப் புற்றை எக்காரணம் கொண்டும் சிதைக்கக் கூடாது. பாம்புப் புற்றில் பல ஆயிரம் ஜீவராசிகள் வாழும் அவற்றை பாழ்படுத்தக்கூடாது. பாம்புப் புற்று ஒரு தெய்வீக அடையாளம்.

முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள்,  ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம், பொருளுதவி செய்வதால்,  இந்த தோஷத்தின் வேகத்தைக் குறைக்கலாம். யாருமற்ற நிலையில் இறந்தவர்களின் சவ அடக்கத்துக்கு உதவுவதன் மூலமாகவும் இந்த தோஷத்தை விலகச் செய்யலாம்

கேது தோஷம் விலக, ஆலயங்களைப் புதுப்பிக்க உதவலாம். வாராவாரம் நடக்கும் உழவாரப் பணிகளில் கலந்துகொண்டால், கேது தோஷம் விலகும்.

ராகு தோஷம் விலக பெண்களுக்கு உதவணும். குறிப்பாக கணவனை இழந்த பெண்கள், விவகாரத்துப் பெற்ற பெண்களுக்கு உதவிகள் செய்யவேண்டும். மாற்றுத் திறனாளிகள், வாய்ப்பேசாதவர்கள், கண் பார்வையற்றவர்களுக்குப் பொருளுதவி செய்யலாம். ராகு, கேதுவை ஆணுமற்ற, பெண்ணுமற்ற கிரகம் என்று சொல்வார்கள். அதனால் மூன்றாம் பாலினம்னு சொல்லக்கூடிய திருநங்கைகளுக்கு உதவலாம் . இதுபோன்ற பரிகாரங்களை எல்லாம் நாம் செய்து வந்தால் ராகு- கேது தோஷம் விலகி விரைவில் திருமணம்நடைபெறுவதுடன் சுகமான வாழ்க்கையும் அமையும்

''திருமணத்துக்கு வரன் தேடிக்கிட்டிருக்கிற பெற்றோரைக் கேட்டால், அவங்களே சொல்லிடுவாங்க, 'நாகதோஷத்தாலதாங்க திருமணம் தடையா இருக்குன்னு. அதென்ன நாகதோஷம்... தீர்க்க முடியாத தோஷமா அது... அதுக்கும் பரிகாரங்கள் இருக்கு..."

"நாகதோஷத்துக்கு உரிய கிரகங்கள் ராகு, கேது. ஜோதிட சாஸ்திரத்துல தொடக்கத்துல ஏழு கிரகங்கள்தான் இருந்திருக்கு. பிற்காலத்துலதான் ராகுவும் கேதுவும் சேர்க்கப்பட்டிருக்கு. சில ஜோதிட நூல்கள், சனியைப் போல் ராகு, செவ்வாயைப் போல் கேது எனக் கூறுகின்றன. 

சனி கிரகம், நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்போது ஏற்படக்கூடிய புழுதிப்புயலை ராகு என்றும், செவ்வாய் கிரகம் சுற்றும்போது அந்தக் கிரகத்தைச் சுற்றி ஏற்படும் புழுதிப்புயலை கேது என்றும் கூறுகிறார்கள். இவற்றை சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்லுவாங்க. இந்த நிழல் கிரகங்கள், நிஜ கிரகங்களான சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், செவ்வாய், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின்  தன்மையை வேகத்தைக் குறைக்கச் செய்கின்றன. அதனால்தான் இந்த ராகு, கேது தோஷம் பெரிய அளவுல பேசப்படுது.

ராகு என்ன மாதிரியான கிரகம்னு பார்த்தீங்கனா நம்ம பாட்டன், பாட்டியோட கிரகமாகும். நம்முடைய பாட்டன், பாட்டி ஏதாவது தவறுகள், பாவங்கள் செய்திருந்தால் அந்த தோஷமானது ஜீன் வழியாக நமக்குத் தொடர்கிறது.

கணவன், மனைவியின் தாம்பத்திய வாழ்க்கையில் இயற்கையாக கரு கலைந்துபோவது பாவம் அல்ல. ஆனால், அடிக்கடி கருக்கலைப்பு செய்வது, 'இதுவா, அதுவா'னு பார்த்துவிட்டு கருக்கலைப்புச் செய்வது பாவமாகும். இப்படிச் செய்பவர்களுக்கு அடுத்து வரும் வாரிசுக்கு ராகு, கேது தோஷம் ஏற்படுகிறது. ராகு,பெண்கள் ஆதிக்கம் உள்ள கிரகம். பெண்களுக்குத் துரோகம் செய்தாலும் தோஷம் ஏற்படும். 'கல்யாணம் செய்துகொள்கிறேன்' என காதலிச்சிட்டு, பிறகு அவர்களைக் கைவிவிடுவது, கொஞ்ச நாள்  சேர்ந்து வாழ்ந்துட்டு, பிறகு விலகுவது இதெல்லாம் பாவமாகும். இவர்களின் வாரிசுகளுக்கும் ராகுவால் தோஷம் ஏற்படும்.

கேதுங்கிறது ஆன்மிக கிரகம். ஞானக்காரகன் என்றே கேதுவைச் சொல்வார்கள். குருவை நிந்தனை செய்யும்போது, நமக்கு ஆசானாக இருப்பவர்களுக்குக் கெடுதல் செய்யும்போது, வழிபாட்டுத் தளங்களைச் சிதைக்கும்போது, வழிபாட்டுக்கு உரியவர்களை வசைபாடும்போது அவர்களின் சந்ததிகளுக்கு கேது தோஷம் ஏற்படுகிறது.

புதையல் பொருள்கள், அடுத்தவர்களின் பொருள்கள், கோயில் சொத்துகள் இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளும்போது, பிறருக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆலய பொருள்களை கவர்ந்துகொள்ளும்போது ராகு- கேது தோஷம் ஏற்படுகிறது. அடுத்தவர்களை ஏமாற்றினாலும், நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் இந்த ராகு, கேது தோஷம் ஏற்படுகிறது.

தீண்டாத பாம்புகளை அடித்துக்கொன்றாலும், இந்த தோஷம் ஏற்படும். பாம்புப் புற்றை எக்காரணம் கொண்டும் சிதைக்கக் கூடாது. பாம்புப் புற்றில் பல ஆயிரம் ஜீவராசிகள் வாழும் அவற்றை பாழ்படுத்தக்கூடாது. பாம்புப் புற்று ஒரு தெய்வீக அடையாளம்.

முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள்,  ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம், பொருளுதவி செய்வதால்,  இந்த தோஷத்தின் வேகத்தைக் குறைக்கலாம். யாருமற்ற நிலையில் இறந்தவர்களின் சவ அடக்கத்துக்கு உதவுவதன் மூலமாகவும் இந்த தோஷத்தை விலகச் செய்யலாம்

கேது தோஷம் விலக, ஆலயங்களைப் புதுப்பிக்க உதவலாம். வாராவாரம் நடக்கும் உழவாரப் பணிகளில் கலந்துகொண்டால், கேது தோஷம் விலகும்.

ராகு தோஷம் விலக பெண்களுக்கு உதவணும். குறிப்பாக கணவனை இழந்த பெண்கள், விவகாரத்துப் பெற்ற பெண்களுக்கு உதவிகள் செய்யவேண்டும். மாற்றுத் திறனாளிகள், வாய்ப்பேசாதவர்கள், கண் பார்வையற்றவர்களுக்குப் பொருளுதவி செய்யலாம். ராகு, கேதுவை ஆணுமற்ற, பெண்ணுமற்ற கிரகம் என்று சொல்வார்கள். அதனால் மூன்றாம் பாலினம்னு சொல்லக்கூடிய திருநங்கைகளுக்கு உதவலாம் . இதுபோன்ற பரிகாரங்களை எல்லாம் நாம் செய்து வந்தால் ராகு- கேது தோஷம் விலகி விரைவில் திருமணம்நடைபெறுவதுடன் சுகமான வாழ்க்கையும் அமையும்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?


செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ முனிவருக்கும் தேவகன்னிகைக்கும் பிறந்த செவ்வாய் பகவான், பூமித்தாயால் வளர்க்கப்பட்டவர். இதனாலேயே இவர் பூமிக்கு உரிய நாயகராக விளங்குகிறார். மங்களங்களை மட்டுமே அருளும் செவ்வாய் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைக்கொண்டே பலன்களை அளிக்கிறார். பூமிகாரகன், அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன், வீரபுத்ரன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் செவ்வாய் பகவான், தன்னை வணங்குவோருக்கு மங்களங்களை அருளும் இரக்கக் குணம் கொண்டவர்.

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருக்கிறது என்பதை அறிந்தவுடன் நாம் தவித்துப்போகிறோம். `செவ்வாய் தோஷம் கொண்டவர்களுக்கு திருமணமே அமையாது, அமைந்தாலும் நிலைக்காது’ என்றெல்லாம் சொல்லி, அவர்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கிவிடுகிறோம்
`செவ்வாய் தோஷம் என்றால் என்ன, அதற்கான பரிகாரங்கள், வழிபாடுகள் என்னென்ன?’ என்பதைப் பற்றி ஜோதிடர் ஞானரதத்திடம் கேட்டோம்.

``செவ்வாய் தோஷம் என்பது மிகவும் நுட்பமான அறிவியல். திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தாம்பத்யத்தைக் குறிக்கும் கிரகம். ருவாழ்க்கையில் செவ்வாய்க் கிரகம், இன்ப வாழ்வை தீர்மானிக்கும் சக்தி படைத்தது. செவ்வாய்க் கிரகம் மனித உடலின் எலும்பு மஜ்ஜையுடன் தொடர்புடையது. மஜ்ஜையிலிருந்துதான் ரத்தம் உருவாகிறது; ரத்தம்தான் இனவிருத்திக்கான அடிப்படையாக அமைகிறது. எல்லாவற்றையுமே நேரிடையாகச் சொல்லிவிட முடியாது என்ற காரணத்தால்தான் நம் முன்னோர் இலை மறைவு, காய் மறைவாக `தோஷம்' என்ற பெயரில் இந்த அறிவியல்நுட்பத்தைக் கூறினார்கள். ஒருவரது உடலில் ஏற்படும் அதிர்வலையும் செவ்வாய் கிரகத்தின் அதிர்வலையும் பலமாகப் பொருந்திவந்தால் அவர் செவ்வாய் தோஷம் கொண்டவராகக் கருதப்படுகிறார். அவருக்கு அதே செவ்வாய் தோஷமுள்ள இணையை திருமணம் செய்துவைத்தால் திருமணம் இனிமையாகி தாம்பத்யம் சிறக்கும் என்பதே ஜோதிடம் சொல்லும் உண்மை. அரைகுறையாக ஜோதிடத்தைத் தெரிந்துகொண்டு, இந்த இடத்தில் செவ்வாய் இருந்தால் ஆபத்து என்பதெல்லாம் தவறானது. முழுமையாகக் கற்றறிந்த ஜோதிடர்கள், ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்து பலன்களைச் சொல்வதே நல்லது.

செவ்வாயைப் பொறுத்தவரை ஒருவரின் ஜாதகத்தில் பல விதிவிலக்குகள் உள்ளன. செவ்வாய் தோஷம் என்பதை ஓர் அறிகுறியாக வைத்துக்கொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை மேற்கொண்டால் சிறப்பான வாழ்வைப் பெறலாம். திருமணம் தவிர, வீண் செலவு, கோபம் போன்ற விளைவுகளையும் செவ்வாய் பகவானே தீர்மானிப்பதால் அவரை வணங்கிப் பலன் பெறவேண்டும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பல வழிகளில் தோஷநிவர்த்தி செய்துகொள்ளலாம். செவ்வாய்க்கான தலமான வைத்தீஸ்வரன் கோயிலிலிருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வாய்க் கிழமையன்று விளக்கேற்றி விசேஷ பூஜைகள் செய்து வணங்கலாம். செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். குறிப்பாக திருச்செந்தூர் செல்வது நன்மையளிக்கும். எல்லா சிவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து வணங்குவது நல்ல பலனைத் தரும்.

செவ்வாய்க்கிழமை துர்கை அம்மனை வணங்கி விரதம் இருப்பதும் நல்லது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு செவ்வாய் ஆதிக்கம் குறையும் என்றால் அதன் பிறகு திருமணம் செய்துகொள்ளலாம். பவள மோதிரம் அணிவது செவ்வாயின் வீரியத்தைக் குறைக்கும். பைரவர், அனுமன் வழிபாடும் செவ்வாய் பகவானுக்கு விருப்பமானவை.
கிரகங்களில் செவ்வாய் நெருப்பு வடிவமானது. சகல தேவர்களுக்கும் ஆகுதியைக் கொண்டு செல்லும் நெருப்பு உடனடியாகப் பலன்களை வழங்கக்கூடியது. வேண்டியவரைக் கலங்காமல் காப்பவர் செவ்வாய் பகவான். இவரது புகழைப் பாடித் துதிக்கும் பக்தர்களை இவர் கைவிடுவதே இல்லை. ஒன்பது வாரங்கள் செவ்வாய் விரதம் இருந்தால், எந்த தோஷத்தையும் நிவர்த்தி செய்துவிடலாம். தகுந்த ஜோதிடர்களை ஆலோசித்த பிறகே உங்கள் தோஷங்களை அறிந்து, அதற்கு நிவர்த்தி தேட வேண்டும் என்பது முக்கியமானது" என்றார்

நல்ல செயல்களும், தரும சிந்தனையும், மனமுருகிச் செய்யும் பிரார்த்தனையும் நிச்சயம் எந்த தோஷத்தையும் விலக்கிவிடச் செய்யும். தேவையற்ற பயமும் குழப்பமும் நீங்கி நலமுடன் வாழ செவ்வாய் பகவானை பிரார்த்திப்போம்.

"ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்."

வெள்ளி, 30 மார்ச், 2018

கிரகப்பிரவேசத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !!




கிரகப்பிரவேசத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !!



பல குடும்பங்களில் உணர்வுப்பூர்வமான விழாவாக கொண்டாடப்படும் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்கள் பற்றி வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

சுப தினம் :

சுப நிகழ்ச்சிகளுக்காக, குடும்ப வழக்கப்படி குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுப்பது பொதுவான முறையாகும். அதன்படி கிரகப்பிரவேசத்திற்கான நாளை தேர்ந்தெடுப்பது முதல் கட்டமாகும்.

வாஸ்து சாந்தி :

கிரகப்பிரவேசம் நடக்கும் நாளுக்கு முன் தினம் வாஸ்து சாந்தி என்ற ஹோம பூஜை நடத்தப்படும். அதாவது, புது வீட்டின் எட்டு திக்குகளிலும் வாசம் செய்யும் அஷ்டதிக் பாலகர்களுக்கான பூஜைகளும், வாஸ்து ரீதியான குறைகள் அகல வேண்டும் என்ற பூஜையும் விஷேசமாக செய்யப்படும்.

பூஜைக்கான இடம் :

புது வீட்டிலுள்ள ஹாலின் மையப்பகுதியில் பூஜை மற்றும் ஹோமம் செய்வதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்படும். அதற்கு முன்னதாக அந்த இடம் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம்.

கிழக்கு முகம் :

பூஜைக்குரிய கடவுள் படங்கள் அல்லது சிலைகளை கிழக்கு முகமாக வைக்கப்படுவது சம்பிரதாயமான முறையாகும். சற்று உயரமாக அதற்கேற்ற அமைப்புகளை செய்து கொள்ள வேண்டும்.

நுழையும் விதம் :

புது வீட்டுக்குள் நுழைய உள்ள தம்பதிகள் தங்களது வலது காலை எடுத்து வைத்து தான் உள்ளே செல்ல வேண்டும். பொதுவாகவே, புதுமனை புகுவிழா சமயங்களில் எப்போதுமே வலது காலை முன் வைத்து செல்வதையே பழக்கமாக்கிக்கொள்வது நல்லது.

கதவு, நிலை அலங்காரம் :

தலைவாசல் மற்றும் கதவுநிலைகள் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு பொட்டிட்டு, வாசனை மலர்களால் நன்றாக அலங்காரம் செய்ய வேண்டும். குறிப்பாக, நிலைகளுக்கு மேற்புறத்தில் மாவிலை தோரணம் மற்றும் பெரிய அளவிலான வாசனை மலர்களால் கட்டப்பட்ட மாலைகளை சூட்டுவது முக்கியம்.

வாசலில் கோலம் :

தலைவாசலுக்கு முன்புறம் அழகிய வண்ணங்களில் கோலங்கள் இடப்பட்டு, மலர்களால் அலங்கரித்து அதன் மத்தியில் அகல் விளக்கை ஏற்றி வைப்பது மங்களங்களை அளிக்கும்.

மங்களப் பொருட்கள் :

கிரகப்பிரவேச பூஜைகள் முற்றிலுமாக பூர்த்தி அடைவதற்கு முன்னதாக புது வீட்டுக்குள் பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது கூடாது. கிரகப்பிரவேச நாளுக்கு முன் தினம் மாலை நேரத்தில் உப்பு, மஞ்சள், குடம் நிறைய தண்ணீர் ஆகியவற்றை புது வீட்டின் சமையலறையில் வைப்பது பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது.

திருஷ்டி சுற்றல் :

கிரகப்பிரவேசம் நடத்தும் தம்பதிகள் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திருஷ்டி பரிகாரமாக பூசணிக்காய் அல்லது தேங்காய் சுற்றி அதை வெளிப்புற தெருமுனையில் உடைப்பது வழக்கமாகும்.