செவ்வாய், 27 மார்ச், 2018

ருத்ராட்சம்

ருத்ராட்சம். மருத்துவ பலன்களும் ஆன்மீக பலன்களும் நிறைந்த ருத்ராட்சம் அணிவதால் நமக்கு பல நன்மைகள் கிட்டும்.
ருத்ராட்சத்தில் ஒரு முக ருத்ராட்சம் முதல் 21 முக ருத்ராட்சம் வரை பல வகைகள் உள்ளது. அனைவரும் ஐந்து முக ருத்ராட்சமாவது கட்டாயமாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.
ருத்ராட்சத்தின் மேற்பகுதியில் காணப்படும் கோடுகளின் எண்ணிக்கையினை வைத்தே அதன் முகமானது குறிப்பிடப்படுகிறது.
ருத்ராட்சத்தின் வகை
ஒரு முகம் கொண்ட ஏகமுகி ருத்ராட்சம் மிகவும் ஆற்றல் உடையது. எனவே இதனை தகுந்த வழிகாட்டுதல் இன்றி அணியக்கூடாது.
இருமுகம் கொண்ட துவிமுகி ருத்ராட்சமானது பொருள்வளத்தினை தரும்.
ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சமானது உடலுக்கு ஆரோக்கியத்தினையும் ஆற்றலினை தரவல்லது. இதனை ஆண், பெண் பேதமின்றி அனைவரும் அணியலாம்.
ஆறுமுகம் கொண்ட ருத்ராட்சமானது சண்முகி ருத்ராட்சம் என அழைக்கப்படுகிறது. இதனை 14 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் அணிவதன் மூலமாக தாயின் பூரண பாசத்தினை பெறலாம்.
மேலும், உடல்நலம் குன்றியோர், மனநலம் குன்றியோர், சர்க்கரை நோய், இதயநோய் உடையவர்கள் அணியும் போது உடல்நலன் படிபடியாக சீராகும்.
பின்பற்ற வேண்டியவை
ருத்ராட்சம் யார் வேண்டுமானாலும் அணியலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், அணிந்த ருத்ராட்சத்தினை எப்போது கழற்றக்கூடாது. இதனால் பாவம் வந்து சேரும்.
ருத்ராட்சத்தினை எப்போது அணிந்தே இருக்கலாம். திதி போன்ற இயற்கை நிகழ்வுகளினால் இதனை கழற்ற வேண்டிய அவசியம் இல்லை.
இறைச்சி, மது போன்ற பழக்கத்தினை மட்டும் கைவிடுதல் அவசியமாகும். ருத்ராட்சத்தினை தனியாக அணியக்கூடாது. எனவே ஏதேனும் உலோகத்துடன் சேர்த்து அணிதல் அவசியமாகும்.
பலன்கள்
  • ருத்ராட்சம் அணிவதால் மனநிம்மதி கிடைக்கும். உடல்நலம் சீராகும்.
  • சிறுவர், சிறுமியர் அணிவதால் அவர்களின் படிப்பு திறனானது பளிச்சிடும்.
  • பெண்கள் ருத்ராட்சம் அணிவதால் தீர்க்க சுமங்கலியாக இருப்பர். அவர்களின் கணவர்களுக்கு தொழிலில் நல்ல லாபமும், வெற்றியும் கிட்டும்.
  • ருத்ராட்சம் அணிவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

வாஸ்து

பஞ்சபூதங்களில் ஒன்றான "நிலம்" மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை "நைருதி மூலை/குபேர மூலை" என்றும் கூறுவர். 

தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திறப்போ அமைக்ககூடாது.  

அடிப்படையில் நாம் வாழும் பூமியானது நேராக இல்லாமல் தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இப்படி இருப்பதால் தான் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரமுடிகிறது.  

திங்கள், 26 மார்ச், 2018

வாஸ்து


எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள்.

1)வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக் கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்க ள் மாற்றத்தை.

2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்க ள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.

3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனா ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையி ல் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.

5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.

8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.

9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.

11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்

12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.

14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

செய்யும் தொழிலே தெய்வம்

ஒரு பணக்காரன் பூந்தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்தைப் பராமரிக்க இரு வேலையாட்கள் இருந்தனர். ஒருவன் சோம்பேறி. வேலையே செய்யமாட்டான். பகலெல்லாம் தோட்டத்தில் தூங்குவான். ஆனால், முதலாளியின் தலையைக் கண்டதும் ஓடிச் சென்று தலைக்கு மேல் கும்பிடு போட்டு நிற்பான். அவர் உடுத்தியிருக்கும் ஆடை, ஆபரணத்தைப் புகழ்ந்து பேசி நடிப்பான். இன்னொரு வேலையாளோ 'தானுண்டு தன் வேலையுண்டு' என்றிருப்பான். அவன் எண்ணம் எல்லாம் தோட்டத்தை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும். பூச்செடிக்கு தண்ணீர்விடுவது, பாத்தி அமைப்பது என்று நாள் முழுவதும் கடுமையாகப் பாடுபடுவான். முதலாளியை புகழ்ச்சியாக பாராட்டியதில்லை. எதுவும் பேசாமல் அவர் முன் அடக்கத்துடன் நிற்பான். 

சோம்பேறியின் ஏமாற்றுவேலை எத்தனை நாள் பலித்துவிடும்? உண்மையை அறிந்த முதலாளி, ஒருநாள் சோம்பேறியை தோட்டவேலையில் இருந்து வெளியேற்றினார். நல்லவனை பாராட்டியதோடு, அவனுக்கு சன்மானமாகப் பெரும்பொருள் கொடுத்து மகிழ்ந்தார். பூந்தோட்டம் போன்றது தான் இந்த உலகம். இதற்கு கடவுள் தான் முதலாளி. இங்கே இருவிதமான மனிதர்கள் வாழ்கிறார்கள். ஏமாற்றும் குணம் படைத்து, கடவுளின் புகழ்பாடி பக்தி செய்கிறோம் என்று சொல்பவர்கள் ஒருபுறம். தன் கடமை அறிந்து உலகிற்குப் பயனுடையவர்களாக வாழவேண்டும் என்ற லட்சியம் கொண்ட உழைப்பாளிகள் மறுபுறம். உண்மையில், உலகின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் உழைப்பாளிகளே கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர்கள். 

எது கடவுள்

இலை, புஷ்பம், பழம், தண்ணீர் இவை ஏதேனும் யார் பக்தியுடன் சமர்ப்பிக்கிறாரோ அதில் நான் திருப்தியடைகிறேன். நேர்மையற்ற பக்தியை நான் ஏற்பதில்லை''இது பகவத்கீதையில் கிருஷ்ணன். 
இவ்வளவு தான் இறைவன் வேண்டுவது. இதுவும் கூட அலை பாய்ந்து கொண்டிருக்கும் நமது மனசை திருப்தி அடையச் செய்யத் தான். இதை எல்லாம் கொடுத்து தான் இறையை நிறைவு செய்ய வேண்டும் என்பதல்ல. இறையே - இலை, புஷ்பம், பழம், தண்ணீர் இவையும், இவை கடந்தவையும் தான். இந்த பிரபஞ்சத்திலுள்ள உயிரினம் எல்லாமும், உயிரினம் அல்லாதவையும் தான் இறை. எல்லா உயர்திணையும், எல்லா அஃறிணையும் இறை தான். எந்த திணையும் கடந்தவை தான் இறை.
எது கடவுள்? எது இறை? எது சாமி? எது தெய்வம்? எல்லாமே இறை தான். இதை எப்படி உணர்வது? எப்படியும் உணரலாம். எந்த வழியில் உணர்வது? எந்த வழியிலும் உணரலாம். அல்லது ''சும்மா இரு... சொல் அற...'' என்றும் உணரலாம்.
''அலப்பறை'' என்ற நவீனத் தமிழ் வார்த்தைக்கு எதிரான வார்த்தை ''சும்மா இரு...'' ''ஓட்டை வாய்'' என்ற வார்த்தைக்கு எதிரான வார்த்தை ''சொல் அற...'' வாழ்க்கையில் மாற்றம் மட்டுமே மாறாதது. இறையை உணரும் வழிகளும், வழிபாட்டு முறைகளும் காலம் காலமாக மாறுகிறது.
கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும்.என்னஅது? 
அலப்பறை அதிகமாகி இருக்கிறது. இறையோடு தொடர்புடைய அலப்பறைகளைப் பார்க்கும் சமயத்தில் சிரிப்பு தான் வருகிறது.
முக்கியமான மையமான உயிர்த்தன்மையை கைவிட்டு, ஜிகினா பளபளப்பைக் கொண்டாடும் குணத்துக்கு நாம் மாறி வருகிறோம். இந்திரியத் துறவு என்பதை வாழ்வியலாக கொள்ளாதவர்களை, சிறந்த துறவி என்று கொண்டாடுகிறோம்.
வார்த்தைகளை கடந்து மவுனத்துக்குள் மூழ்காமல், வண்டி வண்டியாக நுரைக்க நுரைக்க பேசுபவர்களை தெய்வமாகவே கொண்டாடுகிறோம்.
பொது வெளியிலும், வீட்டிலும் பூஜை, புனஸ்காரம் என்று வந்து விட்டால் கூடவே சேர்ந்து பெண்களுக்கு மாரடைப்பும் வந்து விடுகிறது. காரணம் - பண்பாடு, சம்பிரதாயம், பழக்கம், வழக்கம், பாரம்பரியம் என்ற பெயரில் பெண்களும் அவர்களுக்கு கட்டமைக்கப்பட்டுள்ள கடமைகளும் மூச்சடைக்க வைக்கின்றன.
ஏதாவதொரு கொழுகொம்பு (துணை) கிடைக்காதா அதை பற்றிக் கொண்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டு உயிர்க்கடலினை கடந்து விட மாட்டோமா 
என்றெல்லாம் பரிதவிப்பு பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. இது தவிர அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இல்லற ஆன்மிக கடமைகளும் அதிகமாக இருக்கிறது.
பண்டிகை நாளில் வீட்டு பூஜைக்கு கணவர் குளித்து முடித்து வரும் போது, சகலத்தையும் ஆயத்தமாக வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பெண்ணுக்கு தான்.
கைக்கு எட்டும் தூரத்தில் தீப்பெட்டியை வைக்கவில்லை. வாழைப்பழம் வைக்க வில்லை. பூ வைக்கவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு பட்டியல் நீளும். வசவுகள் கேட்கும் போது அவளுக்குள் பொங்கும் ரவுத்திரத்தில் சாமிகள் எல்லோரையும் திட்டித் தீர்ப்பாள் மனசுக்குள்.இத்தனையும் கூலிக்காரியாக அவள் செய்வாள். அவன் நீட்டி வளைத்து, உடல் வளையாமல் பூஜை செய்து முடிப்பான். அவளை அநாகரிகமாக திட்டித் தீர்த்த வாயால் - மந்திரம் சொல்லி பக்தி செய்தால் சாமி மயங்குமா? சாமிகள் அருள் தருமா? 
அப்படியே செய்தால் அது சாமி தானா? சாமிக்கும் அடுக்குமா? சாமிக்கு தர்மம் தானா? இந்தக் கேள்விகள் அத்தனையும் காற்றில் மெல்லிய புலம்பலாக கரைந்திருக்கின்றன. 
வீட்டின் பூஜையில் அவள் எடுபிடி பூஜை செய்வாள். ஆஸ்ரமத்தின் பூஜையில் அவள் எடுபிடி சேவை செய்வாள். 
கோயிலிலும் அவள் எடுபிடி சேவை செய்வாள். ஆனால் எல்லா இடத்திலுமே அவள் இரண்டாம் தர, மூன்றாம் தர பிரஜையாக இருக்கிறாள். ஆனாலும் அவளைக் கொண்டாடுவது கிடையாது. அவளை மதிப்பது கிடையாது. அவள் ஒதுக்கப்பட்ட மனுஷியாகவே கிடக்கிறாள்.
இந்த சனாதனக் கோபங்கள் கொப்பளிக்கும் நாட்களில் நான் தேடிச் செல்லும் அம்மை, மேல்மருவத்தூர் அன்னை. சிறுவயதில் பாவாடை சட்டை பருவத்தில் சென்ற போது அவளும் சிறிய பீடத்தில் இருந்தாள். ஆனால் அதே தீட்சண்யம், அதே தாய்மைக் கனிவு, அதே பனிக் குளுமை இதெல்லாம் அப்போதும் உணர்ந்தேன். சின்னஞ் சிறுமியாக கண்களை விரித்துப் பார்த்த அதே மேல்மருவத்தூர் அன்னை இப்போது விஸ்வரூபம் 
எடுத்திருக்கிறாள்.
அந்த திருக்கோயிலின் இன்னுமொரு ஆத்மார்த்தமான புனிதம் - பெண்ணுக்குத் தரப்படும் முதன்மை. பெண்ணுக்கு தரப்படும் கவுரவம். சமூக மரியாதை பெண்ணுக்கு உயர்வாகத் தரப்படும் பீடம் மேல்மருவத்தூர். பெண்ணை தெய்வமாக கொண்டாடப்படும் சமூகத்தில், பெண்ணுக்கு கோயிலில் சுதந்திரம் கிடையாது. உடலிலேயே கருவறை சுமக்கும் பெண்ணுக்கு கோயிலில் கருவறைக்கு செல்லும் சுதந்திரம் கிடையாது. மேல்மருவத்தூரில் தெய்வமும் பெண் தான்.
பூஜாரியும் பெண் தான்.
ஆண் சனாதனம் நொறுங்கும் இடம் மேல்மருவத்தூர். உயர்வு, தாழ்வு, தீண்டத் தகுந்தவர், தீண்டத் தகாதவர், ஏழை, பணக்காரர், எந்த விதமான பாகுபாடும் 
இல்லாத நீதிக்கோயில். 
பெண்மைக்கோயில். 
உண்மைக்கோயில் 
மேல்மருவத்தூர்.
வெறும் எலுமிச்சம்பழம் போதும் அம்மைக்கு. வேறெந்த ஆடம்பரமும் வேண்டாம் இந்த செவ்வாடை தேவிக்கு. எத்தனை முறை அவளின் பிரகாரம் சுற்றி 
வந்திருப்பேன் என்பதான கணக்கு ஏதுமில்லை. அவளின் அருள், அவளின் கருணை, அவளின் புன்னகை என்னைக் கனிவோடு வழிநடத்துகிறது. அவளுக்கு நான் வேறேதும் கொடுத்ததில்லை. என் அன்பு, நேசம், பாசம், பக்தி தவிர. இது மட்டுமே என் இருப்பில் உள்ளது. அதனால் நான் அவளின் இருப்பில் உள்ளேன்.
கோயில்கள் தெய்வத்தின் பீடங்களாகவும் இருக்க வேண்டும். அது போன்று நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், எளிமை இதன் பீடமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் மேல்மருவத்தூர் அம்மை திருக்கோயிலின் புனித வெப்பம் - சனாதனங்கள் பொசுங்கும் அனலின் வெப்பம். அந்த வெப்பம் தான் சூரியனுக்கும் தாயாகும் வெப்பம்.

நந்தி திருமணம்



#திருமண #வரம் #அருளும் #நந்தி #திருமணம்
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கிராமத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் சுந்தராம்பிகை சமேத வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்த இவ்வூர் ‘வடகரை மழபாடி’ என அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மழவர்கள் என்கிற பழங்குடியினர் வாழ்ந்தனர். சிறந்த போர்வீரர்களான மழவர்களின் சேனைகள் தங்கியிருந்த இடம் ‘மழவர்பாடி’ என்றாயிற்று. இதுவே பின்னாளில் திருமழப்பாடி என்று ஆனதாக சொல்லப்படுகிறது.மனித தலை மிருக உடலமைப்பைக் கொண்ட புருடாமிருகரிஷி வழிபட்ட தலம் இது என்று தல வரலாறு சொல்கிறது.
மார்க்கண்டேய முனிவருக்கு சிவபெருமான் காட்சி தந்து, மழு எனும் படையை தாங்கி ஆடல் செய்தருளிய தலம் இது என்பதால் ‘மழுபாடி’ என்ற பெயர் வந்ததாக புராண தகவல் ஒன்றும் சொல்கிறார்கள்.
இங்குள்ள வைத்தியநாதசாமி கோவில், கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தக் கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.
நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.
ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டுமே அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.
இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.
இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர் களின் நம்பிக்கை.
இந்த கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
தஞ்சை மாவட்டம் திருவையாற்றை அடுத்த அந்தணர்புரம் எனும் தலத்தில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் தனக்கு புத்திரப் பேறு இல்லாததை நினைத்து ஈசனை நோக்கி தவம் இருந்தார். அவர் முன் தோன்றிய ஐயாறப்பர், ‘சிலாதனே! நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை எடுத்துக் கொள்வாயாக. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்’ என அருளினார்.
அவ்வாறே யாகம் செய்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாதமுனிவர், அதனுள் ஓர் அதிசய மூர்த்தியையும் கண்டார். அந்த மூர்த்தி நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரன் அணிந்த முடியும் கொண்டு விளங்கியது.
அப்போது ஐயாறப்பர் அசரீரியாக ‘பெட்டியை மூடித்திற’ என அருள்வாக்கு கூறினார். அதன்படி சிலாதமுனிவர் பெட்டியை மூடி திறந்ததும், முந்தைய வடிவம் நீங்கி அதில் ஒரு அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு செப்பேசன் என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்று அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.
‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது மகனை இழக்க நேர்ந்து விடுமே’ என சிலாத முனிவரும், அவரது மனைவியும் வருந்தினர். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலை அடைந்து அயனரி தீர்த்தத்தில் நீராடி காலின் மேல் காலை ஊன்றி கடும் தவம் செய்தார். அப்போது காட்சி தந்த இறைவன், 16 பேறுகளையும் கொடுத்தருளினார். பின்னர் செப்பேசன், ஐயாறப்பர் மீது கொண்ட பற்றினால் பல்வேறு உபதேசங்களை கேட்டறிந்து சிவகணங்களுக்கு (பாதுகாவலர்) தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் பெற்றார். இவரே நந்தியம்பெருமான் ஆவார்.
சிலாத முனிவர், தம் மகனுக்கு திருமழப்பாடி தலத்தில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார்.
இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் செல்வர் . திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தி்யம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வருவர் . இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெறும் .
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும் நந்தியம்பெருமான்- சுயசாம்பிகை திருமணம் திருமழப்பாடியில் நடைபெறுகிறது. இதில் ஐயாறப்பரும், அறம்வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான விழா
பெெ
#அமைவிடம்:
திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம்பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையிலிருந்து பஸ் வசதி உள்ளது. #திருச்சி- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் #அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.
நன்றி,சிவாயநம
,திருச்சிற்றம்பலம் !

மகாளய அமாவாசை

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன. 
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும் இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல் 
மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல் 
நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல் 
ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல் 
ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல் ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும். 
எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல் 
ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும். 

பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும். 
பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் 
பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை. 
பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல். எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

ஞாயிறு, 25 மார்ச், 2018

கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும்,
 ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.

ஆனால்,
    அஷ்டமி, நவமி நாளில்,.
 எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். இது ஏன்?

8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் ,

அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

இவர்களுக்கு
அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.

ஏனென்றால் அஷ்டமி என்பது 8வது திதி.

 அதனால்,
8ஆம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது ஒத்துவரும்.

அதேபோல, 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண்.

மகர ராசி,
கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று
எது வேண்டுமானாலும் செய்யலாம்.

மேலும்,
   சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள்.

 அதாவது, ஜாதகத்தில் சனி
உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும்,

 அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

அது அவர்களை   பாதிக்காது.

நவமி என்பது 9வது திதி.

 9ஆம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ,

நவமி மிகவும்
விசேஷமானதாக இருக்கும்.

 இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி.

 அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி,
விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் ,

நவமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர்.

 அஷ்டமி, நவமி திதிகளில்மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது;

தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.

கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் அந்தத் திதியில்
பிறந்த காரணத்தால் ,

அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார்.

அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார்;

 இறுதியில் வெற்றி பெற்றார்.

இதேபோல் நவமியில் பிறந்த ராமர்,

அரியணை ஏற்கும் நேரத்தில்  காட்டிற்குச் செல்ல
வேண்டிய நிலை ஏற்பட்டது.

 சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம்,

 நவமி திதியில் அவர் பிறந்த
காரணத்தால் தான்,

 என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே தான் நவமி, அஷ்டமி திதிகளில்,

 சுப காரியங்கள்

 திருமணம்,
கிரஹப் பிரவேசம்,
சொத்து வாங்குதல்
மங்கள நிகழ்ச்சிகள்
உள்ளிட்டவை

 மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று,

 முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் ,
   இந்தத் திதிகள்
தெய்வீக காரியங்களுக்கு,

   தீட்சை பெறுவது,

 மந்திரங்கள் ஜெபிப்பது,

 ஹோமங்கள் உள்ளிட்டவைக்கு உகந்தவைக்கு

என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட,

 எதிரிகள் மீது வழக்கு தொடுக்க,

ஆயுதங்கள் பிரயோகிக்க,

 எதிரி நாட்டின் மீது
போர் தொடுப்பது

போன்ற செயல்களுக்கு,

 அஷ்டமி, நவமி திதிகள் ஏற்றவையாகும்...!
தினமும் ராமாயணம் படிக்க முடியாதவர்கள் #இதைச் சொன்னால் #போதும்! #முழு #பலன்..!!

தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா?

என்றால் ...

நிச்சயம் முடியும் எப்படி?

காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார். இதோ உங்களுக்காக....!

|| ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||

|| சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் ||

|| அங்குல்யா பரண சோபிதம் ||

|| சூடாமணி தர்சனகரம் ||

|| ஆஞ்சநேய மாஸ்ரயம் ||

|| வைதேஹி மனோகரம் ||

|| வானர சைன்ய சேவிதம் ||

|| சர்வமங்கள கார்யானுகூலம் ||

|| சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்

இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்...முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது.

நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்கள் உங்கள் வம்சம் ராம நாமத்தால் வளரும்..........இது சத்திய வாக்கு என்று பெரியவா கூறியுள்ளார்.

#ஸ்ரீராமஜயம்

புதன், 7 மார்ச், 2018



பசுமையான துளசிச் செடியை கனவில் கண்டால்? - ஜோதிடர் பதில்கள் !!
ஜோதிடர் பதில்கள் பகுதி - 1 !

1. பசுமையான துளசிச் செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் காரியங்களில் எண்ணிய எண்ணம் ஈடேறும்.

🌟 பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும்.

🌟 மேலும், பொருட்சேர்க்கை உண்டாகும்.

2. காகம் தலையில் தட்டி சென்றால் என்ன பலன்?

🌟 காகம் தலையில் தட்டி சென்றால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

🌟 ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை.

3. இறந்தவர் தான் இறக்கும் தருவாயில் அணிந்திருந்த ஆடை மற்றும் படுக்கையுடன் வீட்டினுள் நுழைவது போன்று கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இம்மாதிரி கனவு வருவது இறந்தவருக்கு சிரார்த்த பூஜைகள் செய்யாமல் இருப்பதைக் சுட்டிக்காட்டுகிறது. எனவே, அவர்களை வழிபட்டு அவர்களுக்கான தர்ப்பணத்தை உரிய காலத்தில் செய்து வர சுபிட்சம் உண்டாகும்.

4. வீட்டின் மீது இடி விழுவதுபோல் கனவு கண்டால் நன்மையா? தீமையா?

🌟 வீட்டின் மீது இடி விழுவதுபோல் கனவு கண்டால் இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

🌟 நெருங்கிய நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியுடன் செயல்பட வேண்டும்.

🌟 ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை.

5. ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆமையை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.

🌟 தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் பெருகும்.

🌟 வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.